உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 27, 2011

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கு தூக்கு தண்டனை

                  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு செப்டம்பர் 9-ல் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

                 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார்.    இவ்வழக்கில் 26 பேருக்கு தூக்குத் தண்டனையை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் 19 பேர் விடுவிக்கப்பட்டனர்.    முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.    இந்நிலையில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு, தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.    

                இதேபோல் குடியரசுத் தலைவருக்கு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 11 ஆண்டுகளுக்கு முன் கருணை மனு அனுப்பினர். மனு இம்மாதம் 12-ஆம் தேதி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு மூலம் சிறை அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட கடிதம் வெள்ளிக்கிழமை கிடைத்தது.    உடனடியாக சிறை அதிகாரிகள் கைதிகள் மூவருக்கும் இத்தகவலை தெரிவித்தனர். அத்துடன் செப்டம்பர் 9-ம் தேதி மூவரையும் தூக்கிலிட முடிவு செய்யப்பட்டுள்ளதையும் தெரிவித்துள்ளனர்.    


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior