உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 20, 2011

நெய்வேலியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/e9f9b2b6-d88f-48b3-b437-89962a33d6da_S_secvpf.gif
நெய்வேலி:

             நெய்வேலி வட்டம்-16ல் செயல்பட்டு வரும் தொல்காப்பியனார் அரசு உதவி பெறும் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நெய்வேலி மகளிர் மன்றத்தின் தலைவி அன்சாரி முகாமினை தொடங்கி வைத்தார். என்.எல்.சி. பொது மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் உஷா தலைமை தாங்கினார்.

                   கண் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் வெண்மால் தேவி, டாக்டர் ஆர்த்தி ஆகியோர் பள்ளியில் முதல் வகுப்பில் இருந்து 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் சுமார் 200 பேருக்கு பார்வைத்திறன் சோதனை மற்றும் கண் தொடர்பான பிற பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முகாமினை முன்னிட்டு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பிரியாணி பொட்டலங்கள் மகளிர் மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டன.

                மருத்துவர்களின் பரிந்துரையின்படி இப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேவையான மூக்கு கண்ணாடி நெய்வேலி மகளிர் மன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்டது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு அதற்கு ஏற்ற வகையில் சத்து மாத்திரைகள் மற்றும் மருந்துகளும் மகளிர் மன்றத்தால் வழங்கப்பட்டது.

                முகாமில் நெய்வேலி மகளிர் மன்றத்தின் காப்பாளர் உஷாசேகர், செயலாளர் தனலட்சுமி கருப்பசாமி, பொருளாளர் சுஜாதா ஜெகதீஷ், என்.எல்.சி. மருத்துவமனையின் தலைமை பொது கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகசுந்தரம், தொல்காப்பியனார் பள்ளியின் தலைமை ஆசிரியை குழலி, நெய்வேலி மகளிர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்கள் பங்கேற்றனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior