நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள கைக்கினார் குப்பத்தில் ஏரிக்கு கிழக்கு பகுதியில் என்.எல்.சி.க்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு முதலாவது அனல் மின்நிலைய விரிவாக்க பணிக்காக நிலத்தை சீர் செய்யும் பணி நடந்து வருகிறது.
சனிக்கிழமை பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தை சீரமைத்தபோது நிலத்தின் அடியில் கல் ஒன்று தென்பட்டது. உடனடியாக அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தபோது பூமிக்குள் புதைந்திருந்த கல்சிலை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சிலை 2 1/2 அடி உயரம் இருந்தது. கைக்கூப்பி வணங்கிய நிலையில் சிலை காணப்பட்டது. தகவல் அறிந்ததும் அந்தபகுதியில் உள்ள கிராம மக்கள் திரண்டு வந்தனர்.
சாமிசிலையை அருகில் உள்ள பச்சைவாழியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று கோவில் முன்பு வைத்து நீராட்டினார்கள். கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது
இந்த சாமி சிலை 1,000 ஆண்டுகள் பழமையானது ஆகும். சிலை கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் பூமிக்கு அடியில் புதையுண்ட கோவில் இருக்கலாம். எனவே அந்த பகுதியை தோண்டி ஆய்வு நடத்த வேண்டும் என்று கூறினார்கள். சாமி சிலை கிடைத்தது குறித்து சிதம்பரம் தொல்பொருள் ஆய்வு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பார்வையிட உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக