உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, செப்டம்பர் 23, 2011

கடலூரில் குற்றச் செயல்களைக் கண்காணிப்பதற்காக ரூ. 25 லட்சம் செலவில் கண்காணிப்புக் கேமராக்கள்

கடலூர்:

               கடலூரில் குற்றச் செயல்களைக் கண்காணிப்பதற்காக பொது இடங்களில் ரூ. 25 லட்சம் செலவில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் புதன்கிழமை தெரிவித்தார். 

கடலூர் பாரதி சாலையில் கண்காணிப்புக் கேமரா மற்றும் ஒலிபெருக்கி கருவிகள் பொருத்தும் பணியை தொடங்கி வைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன்   கூறியது: 

               கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுலகம், பாரதி சாலை, லாரன்ஸ் சாலை, ஜவான்ஸ் பவன் சந்திப்பு, நகைக் கடைவீதி, வண்டிப்பாளையம் சாலை சந்திப்பு, பஸ் நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், கண்காணிப்புக் கேமரா மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்புகளைச் செய்யும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படும்.  ரூ. 25 லட்சம் செலவில் 18 கண்காணிப்புக் கேமராக்கள், 4 சுழல் கேமராக்கள், 28 ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட உள்ளன. 

              தொடர்ந்து மேலும் 6 இடங்களில் ஒலிபெருக்கிக் கருவிகள் அமைக்கப்படும்.  இவற்றைப் பொருத்துவதன் மூலம் நகை பறிப்பு, கடைகள் மற்றும் பொது இடங்களில் திருட்டு, சாலை விபத்துகள் போன்றவற்றை தடுக்க முடியும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் வசதியாக இருக்கும். ஒலிபெருக்கி மற்றும் கேமராக்களின் செயல்பாடுகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும் என்றார் எஸ்.பி. கூடுதல் கண்காணிப்பாளர்கள் ராமகிருஷ்ணன். நாகராஜன், துணைக் கண்காணிப்பாளர் வனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior