உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், செப்டம்பர் 12, 2011

சிதம்பரம் அருகே முதலை கடித்து பிளஸ்-2 மாணவன் படுகாயம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/e73e0029-09a0-4002-9558-874b1e570572_S_secvpf.gif
 
சிதம்பரம்:

          சிதம்பரம் அருகே முதலை கடித்து பிளஸ்-2 மாணவன் படுகாயம் அடைந்தார்.  சிதம்பரத்தை அடுத்த சிவாயம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் ராஜ்குமார் (வயது 16), பிளஸ்-2 மாணவன். அந்த கிராமத்தில் உள்ள கான்சாகிப் வாய்க்காலுக்கு ராஜ்குமார் சென்றார்.

           அதில் இறங்கிய போது தண்ணீருக்குள் இருந்த ஒரு முதலை அவரது காலை கவ்வி கடித்து குதறியது. அலறித்துடித்த ராஜ்குமார் முழு பலத்துடன் காலை உதறி முதலையின் பிடியில் இருந்து தப்பி கரைக்கு வந்தார்.   அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர்.

          படுகாயத்துடன் துடித்து கொண்டிருந்த குமாரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ராஜ்குமார் சேர்க்கப்பட்டார்.  மாணவனை முதலை கடித்து குதறிய சம்பவத்தை தொடர்ந்து சிவாயம் கிராம பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior