உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், செப்டம்பர் 12, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க.வினர் விருப்ப மனு

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/c7d14270-9650-42f0-a79a-d0886a0fd2e9_S_secvpf.gif
கடலூர்
 
          கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுவை அந்த அந்த கட்சியில் உள்ள நிர்வாகிகள் பெற்று வருகிறார்கள். 
            அதன்படி கடலூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய 3 சட்டசபை தொகுதிக்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியில் கடலூர் ம.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.  
 
               கடலூர் நகர மன்றத் தலைவர் பதவிக்கு சேகர், நெல்லிக்குப்பம் நகரமன்றத்தலைவர் பதவிக்கு ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பிரமமூர்த்தி, ஜெயசங்கர், வெங்கடேசன், நகரசபை உறுப்பினர் பதவிக்கு கண்ணன், வினோதினி பெருமாள், செல்வி கணேசன், பழனி, ராமசாமி, பரமேஸ்வரி, அண்ணாதுரை உள்பட 300 பேர் மாவட்ட செயலாளர் என்.ராமலிங்கத்திடம் விருப்ப மனுவை கொடுத்தனர்.
 
                 நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் வேலு, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மன்றவாணன், நகர செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், ஒன்றிய செயலாளர் பாலமுருகன், சவுந்தரபாண்டியன், அப்துல்காதர், அலுவலக பணியாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior