உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், செப்டம்பர் 21, 2011

உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 400 பேர் விருப்ப மனு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில், 400க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை விருப்ப மனுக்களை அளித்தனர். 

               காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கு விருப்ப மனுக்களைப் பெறுவது ஞாயிற்றுக்கிழமை கடலூர் மாவட்டக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்  தொடங்கியது. எனினும் ஞாயிற்றுக்கிழமை நாள் சரியில்லை என்று, யாரும் மனு அளிக்கவில்லை. திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக வந்து ஆர்வமுடன் விருப்ப மனுக்களை அளித்தனர். 

              விருப்ப மனுக்களை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.நெடுஞ்செழியன் பெற்றுக் கொண்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி நிறுவனப் பல்வேறு அமைப்புகளின் பதவிகளுக்கு, திங்கள்கிழமை ஒரே நாளில் 400க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்ததாக காங்கிரஸ் கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். விருப்ப மனுக்கள் 23-ம் தேதி வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர்கள் அருள் பிரகாசம், சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர்கள் கலை விஜயகுமார், சரவணன், அலமு தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் செல்வகுமார், கார்த்திகேயன், காயல் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior