உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், செப்டம்பர் 21, 2011

கடலூர் மாவட்டம் அரியிருந்த மங்கலம் கிராமத்தில் 61 பேருக்கு ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா: அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு


 
 
 
நெல்லிக்குப்பம்:

               கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் எய்தனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அரியிருந்த மங்கலம் கிராமத்தில் 61 பேருக்கு ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவைகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழுத் தலைவர் கவுரிபாண்டியன், எம்.சி.சம்பத்தும் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்த தலைவர் சீத்தாராமன் வரவேற்றார். கூட்டத்தில் 64 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

ப்போது சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது:- 
 
             கடலூர் தொகுதியும், பண்ருட்டி தொகுதியும் எனக்கு இருகண்கள் போன்றது. எய்தனூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக்கூடம் அடுத்த நிதியாண்டில் உயர்நிலைப் பள்ளிக் கூடமாக முதல்-அமைச்சர் தரம் உயர்த்திதருவார். ஆதி திராவிட மக்கள் மீது பாசம் கொண்டவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவார். இதன் மூலம் தமிழ் நாட்டில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதே முதல்- அமைச்சரின் எண்ணம் ஆகும்.  

               தரமான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவைகளை முதல்-அமைச்சரே நேரில் பார்வையிட்டு வழங்க உத்தரவிட்டார். மிக்சியுடன் 400 மில்லி ஜாரையும் கூடுதலாக வழங்க உத்தரவிட்டவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வெளிமார்க்கெட்டின் விலை ரூ.7 ஆயிரம் ஆகும். ஆனால் இதைவிட அதிக தரத்துடன் ரூ.5 ஆயிரத்து 444 அடக்க விலையில் பொருட்களை கொடுக்கின்றோம். தமிழக மக்களுக்கு தாய் வீட்டு சீதனமாக விலையில்லா பொருட்களை வழங்கியவர் முதல்- அமைச்சர். கடந்த ஆட்சியில் உள்நோக்கத்துடன் டி.வி.யை வழங்கியவர் கருணாநிதி, பெண்களின் துயரங்களை போக்க வேண்டும் என்பது தான் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நோக்கம் ஆகும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

                         விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், தாசில்தார் ஆனந்தராமன், தொகுதி இணை செயலாளர் பாண்டியன், கடலூர் நகர செயலாளர் குமரன், துணை வட்டாட்சியர் குமாரசாமி, ரெவன்யூ இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், வேளாண்மை ஆத்மக்குழுத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவநாதன், நகர பேரவை செயலாளர் கந்தன், வக்கீல் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா தொகுத்து வழங்கினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior