உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதிகள் வரையும் அழகிய ஓவியங்கள்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/1ba6059d-0450-4ca4-a34b-061e3050aa26_S_secvpf.gif
கடலூர்:

               கடலூர் ஜெயில் சுவரில் 2 ஆயுள் தண்டனை கைதிகள் நீதிபோதனைகளை எழுதியும், காந்தி, பாரதியார்  கடலூர் ஜெயிலில் தண்டனை கைதிகள் 412 பேரும், விசாரணை கைதிகள் 422 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர தடுப்பு காவல் சட்டத்தில் கைதான 19 பேரும் உள்ளனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆயுள் தண்டனை கைதியும், மற்றொரு ஆயுள் தண்டனை கைதியும் ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர்கள்.

                 அவர்கள் 2 பேர் உதவியுடன் கடலூர் ஜெயில் காம்பவுண்டு சுவருக்கு உட்புறமும், வெளிப்புறமும் வெள்ளையடித்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், சக கைதிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான பண்புகள் மற்றம் நீதிபோதனைகளை நயத்துடன் கூடிய வார்த்தைகளால் அந்த 2 கைதிகளும் எழுதியுள்ளனர்.

              இதுதவிர சுமார் 10 அடி உயரத்தில் திருவள்ளுவர், காந்தி, பாரதியார் ஓவியங்களையும் கண்ணை கவரும் வகையில் அழகாக வரைந்துள்ளனர். அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் நின்று இந்த ஓவியங்களை பார்த்து ரசிப்பதுடன், நீதிபோதனைகளை படித்து மனநிறைவடைந்து பாராட்டி செல்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior