உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 07, 2011

நெய்வேலியில் இலவச மின்சாரத்துக்காக போராடும் மக்கள்


நெய்வேலி தாண்டவன்குப்பம் பகுதியில் மின் கம்பியில் கொக்கிப் போட்டு முறைகேடாக பெறப்பட்டுள்ள மின் இணைப்புகள்.

நெய்வேலி:

                நெய்வேலி தாண்டவக்குப்பம் பகுதியில் வசிக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இலவச மின்சாரம் கேட்டு அவ்வப்போது சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.  

                நெய்வேலி தாண்டவன்குப்பம் பகுதியில் என்எல்சி ஊழியர்கள் வசித்து வந்தனர். அவர்கள் நிறுவன ஊழியர்கள் என்பதால் நிர்வாகம் தரை வாடகை ரூ.1 மட்டும் வசூலித்து, சலுகை விலையில் மின் இணைப்பு மற்றும் இலவச குடிநீர் வழங்கி வந்தது.  இந்நிலையில் தாண்டவன்குப்பம் பகுதியில் என்எல்சி-யின் சுரங்க விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், அப்பகுதியில் வசித்துவந்த ஊழியர்களுக்கு நெய்வேலி நகரப் பகுதியில் நிறுவன குடியிருப்பை வழங்கியது. 

              இதையடுத்து என்எல்சி ஊழியர்கள் நகரப் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் அப்பகுதியில் என்எல்சி நகர நிர்வாம் மேற்கொண்ட சேவைப் பணிகளை நிறுத்திக் கொண்டது.  இந்நிலையில் என்எல்சி ஊழியர்கள் அல்லாதோர் சிலர் தாண்டவன்குப்பம் பகுதியில் தற்காலிக குடிசை அமைத்து வசித்துவந்தனர். அவ்வாறு வசித்த வந்தவர்கள், நெய்வேலி தெர்மல் - மந்தாரக்குப்பம் சாலை மார்க்கத்தில் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பிகளில் முறைகேடான வகையில் மின் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். 

               இதையடுத்து அவ்வாறு முறைகேடான மின் இணைப்பில் ஈடுபடுவோர் மீது என்எல்சி சார்பில் காவல்நிலையத்தில் புகார் செய்தும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து நிர்வாகம் அவ்வழியே செல்லும் மின் இணைப்பை துண்டித்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அண்மைக் காலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்மையில் ஒரு இளைஞர் என்எல்சி அனல் மின் நிலைய கூலிங் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.  

இதுகுறித்து என்.எல்.சி. நகர நிர்வாக மின் பராமரிப்பு அலுவலர்கள் கூறுகையில்,

            என்எல்சி-யில் பணிபுரியும் ஊழியர்களிடம் மின் உற்பத்திக்கான செலவினங்களை கருத்தில் கொண்டு கட்டண அடிப்படையில் மின் இணைப்பு வழங்கி வருகிறோம். அதேபோன்று மாநில அரசுக்கும் அனல்மின் நிலைய கட்டுமான மதிப்பீட்டின் அடிப்படையில் மின்சாரத்தை விற்பனை செய்து வருகிறோம். மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்பது புரியவில்லை என்கின்றனர். 

             ஆனால் காவல்துறை தரப்பிலோ, "இவ்வுளவு நாள்கள் அவர்களை தங்கவும், மின் திருட்டைக் கண்டும் காணாமல் இருந்தும் அனுமதித்தவர்கள் தற்போது திடீரென புகார் கொடுப்பது ஏன்? பொதுமக்களையும் போலீûஸயும் மோதவிட்டுப் பார்க்கிறார்களா? அப்பகுதியில் மின் இணைப்பு தரமுடியாது, அந்த இடத்தை நிறுவனத்திற்கு தொடர்பில்லாத வேறு சிலர் ஆக்கிரமித்துள்ளனர் எனக் கூறும் நிர்வாகம், அவ்விடத்தை அகற்ற தயங்குவதேன்?' என்கின்றனர்.  

இதுகுறித்து தாண்டவன்குப்பம் பகுதி மக்களின் போராட்டக் குழுவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், 

               சுமார் 40 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்துவரும் இவர்கள் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.  தற்போது இவ்விடத்தை காலி செய்யச்சொல்லும் நிர்வாகம், எங்களுக்கு மாற்றுஇடம் வழங்க வேண்டும். இல்லையேல் மாற்றுஇடம் வழங்கும் வரை இப்பகுதிக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் வழங்கவேண்டும். இதுகுறித்து அமைச்சர் செல்வி ராமஜெயத்திடம் முறையிட்டுள்ளோம். அவரும் எங்களது நிலைக்குறித்து நிறுவனத் தலைவரை சந்தித்து விளக்கியுள்ளார். மேலும் தமிழக முதல்வரின் பார்வைக்கும் எங்களது கோரிக்கையை கொண்டு சென்றுள்ளார். எனவே நல்ல முடிவு கிடைக்கும் வரை மின் இணைப்பு வழங்கவேண்டும் என்றார் ராஜேந்திரன். 







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior