உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

உள்ளாட்சி தேர்தலில் நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் பதவிக்கு ம.தி.மு.க. போட்டி


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/a492d73a-1284-41c1-a33c-241f5f91dfeb_S_secvpf.gif
நெல்லிக்குப்பம்:

            நெல்லிக்குப்பம் நகர ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட பொருளாளர் வேலு தலைமையில் நடந்தது. நகர செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் :-

     பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்திய பொதுச் செயலாளர் வைகோவுக்கு நன்றி தெரிவித்து கொள்வது.

      வருகிற 15-ந்தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ள மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது.  

          வருகிற உள்ளாட்சி தேர்தலில் நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவிக்கு ம.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கத்தை நிறுத்துவது. 

           அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் கொடி யேற்றுவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

              கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயசங்கர், நிர்வாகிகள் மாரிமுத்து, கே.என். முருகன், பிரகாஷ், ராமு, பாலன், கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவைத்தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior