உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

கடலூரில் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு விரைவு சைக்கிள் போட்டி

கடலூர்:

              அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு கடலூரில் மாணவ-மாணவிகளுக்கு விரைவு சைக்கிள் போட்டி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. 

                கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இப்போட்டியை நடத்தியது. மாணவ-மாணவிகளுக்கு தனித் தனியாக 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. 

              இப்போட்டியில் 450 பேர் கலந்துகொண்டனர்.  ஆண்களுக்கான போட்டியில் 13 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களில் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவர் உத்தம் சந்த், 15 வயதுக்குக் கீழ் உள்ள மாணவர்களில் திருப்பாப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவர் விக்னேஷ், 17 வயதுக்குக் கீழ் உள்ள மாணவர்களில் அதே பள்ளி மாணவர் சரண்ராஜ் முதல் இடத்தைப் பெற்றனர்.  

                பெண்களுக்கான போட்டியில் 13 வயதுக்குக் கீழ் உள்ள மாணவிகளில் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவி அட்சயா, 15 வயதுக்குக் கீழ் உள்ள மாணவிகளில் அதே பள்ளி மாணவி ஆர்த்தி, 17 வயதுக்குக் கீழ் உள்ள மாணவிகளில் அதே பள்ளி மாணவி பவித்ரா ஆகியோர் முதல் இடத்தைப் பெற்றனர்.  போட்டிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் தலைமை வகித்தார். தொழில் அதிபர் பாலசேகரன் தொடங்கி வைத்தார்.  வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை, கடலூர் புதுநகர் போலீஸ் ஆய்வாளர் சரவண தேவேந்திரன் வழங்கினார். விளையாட்டுப் பயிற்சியாளர் சைமன் நன்றி கூறினார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior