உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மேலும் ஒரு வழக்கில் கைதுகடலூர் மத்திய சிறையிலேயே கைது செய்யப்பட்டு திருவாரூர் அழைத்துச் செல்ல போலீஸ் வேனில் ஏற்றப்படும் பொன்முடி.
கடலூர்:
           கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, மேலும் ஒரு வழக்கில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு திருவாரூர் அழைத்துச் செல்லப்பட்டார். 
                 நில அபரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்முடி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை ஜாமீனில் விடுதலைச் செய்யக் கோரி விழுப்புரம் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த 5-6-2011 அன்று திருவாரூரில் நடந்த தி.மு.க. நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக ஒருமையில் பேசியதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், மிரட்டல் தொனியிலும் பேசியதாகவும் பொன்முடி மீது, திருவாரூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. 
                 இந்த வழக்கில் திருவாரூர் போலீஸôர் வியாழக்கிழமை, கடலூர் மத்திய சிறைக்கு வந்து பொன்முடியை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். பொன்முடிக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கினால், மீண்டும் திருவாரூர் வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று, திருவாரூர் போலீஸôர் கடந்த ஒரு வாரமாக கடலூர் வந்து மத்திய சிறை வளாகத்தை வட்டமிட்டு வந்தனர். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாததால், வியாழக்கிழமை சிறைக்கே வந்து அவரை கைது செய்துள்ளனர். திருவாரூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பொன்முடியை, 29-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
                பொன்முடியை கைது செய்து அழைத்துச் செல்வதைப் புகைப்படம் எடுக்க செய்தி புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி விடியோ கிராபர்கள் சிறை வளாகத்தில் திரளாகக் கூடியிருந்தனர். ஆனால் அவர்களை படம் எடுக்க விடாமல் கடலூர் போலீசார்  வழக்கத்துக்கு மாறாகத் தடுத்து நிறுத்தித் தகராறு செய்தனர். 
              இதனால், செய்தியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் மிகுந்த சிரமத்துக்கு இடையே, செய்தியாளர்கள் பொன்முடியை படம் எடுக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் கைதிகளை வழக்கமாக அழைத்துச் செல்லும் வழியில் பொன்முடியை அழைத்துச் செல்லாமல் வேறு வழியாக போலீசார்  அழைத்துச் சென்றனர். பொன்முடி கைது செய்யப்பட்டதை முன்னிட்டு சிறை வளாகத்துக்கு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு உள்ளிட்ட தி.மு.க.வினர் வந்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior