சிதம்பரம்:
இன்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட் புக் எண் பெறுவது எப்படி என்கிற நூல் வெளியீட்டு விழா சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம், மணிபாரதி பதிப்பகம் சார்பில் அண்ணாமலைப் பல்கலை. வேளாண்புலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புத்தகங்களை வெளியிடுபவர்கள் தங்களது நூலிற்கு இன்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட் புக் எண் எவ்வாறு பெறுவது என தெரியாமல் உள்ளனர். இந்த நூல், நூல்களை வெளியிடும் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது மிகப்பெரிய நூலகங்களில் புத்தகங்களை அடுக்கி வைத்து, உடனடியாக எடுத்துக் கொடுப்பதற்கு வசதியாக இந்த ஐஎஸ்பிஎன் எண் வழங்கப்படுகிறது. வெப்சைட் மூலம் நூல்களின் எண்களை தெரிந்து நூல்களை எளிதில் பெற இந்த எண் வழி வகுக்கிறது.
இந்நிலையில் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், நூலாசிரியர்கள் பயன்பெறும் வகையில் இந்த நூல் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது என பதிப்பாளர் ச.மணிவண்ணன் தெரிவித்தார்.வேளாண்புல முதல்வர் முனைவர் ஜே.வசந்தகுமார் வெளியிட்டார். முதல் பிரதியை மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பொறியாளர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார். பதிப்பாளர் ச.மணிவண்ணன் வரவேற்றார். ரோட்டரி முன்னாள் தலைவர்கள் முனைவர் க.கதிரேசன், பேராசிரியர் தொல்காப்பியன், மீ.அகோரமூர்த்தி, முனைவர் ஜி.ரவி, முன்னாள் செயலாளர் க.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
FOR MORE DETAILS ABOUT ISBN
0 கருத்துகள்:
கருத்துரையிடுக