உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, அக்டோபர் 01, 2011

உள்ளாட்சித் தேர்தல் மனு பரிசீலனை : கடலூர் மாவட்டத்தில் 148 மனுக்கள் தள்ளுபடி

கடலூர் :

              உள்ளாட்சித் தேர்தலையொட்டி நேற்று நடந்த மனு பரிசீலனையில் கடலூர் மாவட்டத்தில் 148 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

               உள்ளாட்சித் தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 22ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்தது. இந்த மனுக்கள் நேற்று அந்தந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை நடந்தது. அதில் 29 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு தாக்கல் செய்த 272 மனுக்களில் 13 மனுக்கள் போதிய ஆவணங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. 259 மனுக்கள் ஏற்கப்பட்டது. 287 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு தாக்கல் செய்த 2,127 மனுக்களில் 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 2,089 மனுக்கள் ஏற்கப்பட்டது.

              அதேப்போன்று 683 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 4,120 மனுக்களில் 43 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4,077 மனுக்கள் ஏற்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 5 நகர மன்ற தலைவர் பதவிகளுக்கு தாக்கல் செய்த 63 மனுக்களில் 62 மனுக்கள் ஏற்கப்பட்டது. கடலூர் நகராட்சியில் ஒரு சுயேட்சை வேட்பாளரின் மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. 174 கவுன்சிலர் பதவிகளுக்கு தாக்கல் செய்த 1,234 மனுக்களில் 1,198 மனுக்கள் ஏற்கப்பட்டது.

                    போதிய ஆவணங்கள் இல்லாததால் 36 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.அதேப்போன்று 16 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு தாக்கல் செய்த 181 மனுக்களில் 178 மனுக்கள் ஏற்கப்பட்டது. மூன்று மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 258 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தாக்கல் செய்த 1,306 மனுக்களில் 1,292 மனுக்கள் ஏற்கப்பட்டது. 14 மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் மொத்தமுள்ள 5,040 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 15,496 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் இறுதிபட்டியல் இன்று வெளியிடப்படும்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior