உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 13, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 27 ஓட்டு எண்ணும் மையங்களில் 9 மையங்கள் மாற்றம்

கடலூர்:

       கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 27 ஓட்டு எண்ணும் மையங்களில் 9 மையங்கள் மாற்றப்பட்டுள்ளது.
 
கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

        உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. 13 ஒன்றியங்களுக்கான தேவையான ஓட்டுப்பெட்டிகள் மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு தேவையான ஓட்டுச் சீட்டுகள் அரசு அச்சகத்தில் அச்சடித்து விருத்தாசலம் அரசு குடோனிலிருந்து 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.ஒன்றியக்குழு கவுன்சிலர் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டுகள் மாவட்ட அளவில் அச்சடித்து 100 சதவீதம் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
 

          பதிவாகக்கூடிய ஓட்டுகளை எண்ணுவதற்காக ஏற்கனவே 27 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், தற்போது நிர்வாக மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், கம்மாபுரம், மங்களூர் ஒன்றியங்களுக்கும், பண்ருட்டி, நகராட்சி மற்றும் குறிஞ்சிப்பாடி, வடலூர், பெண்ணாடம், திட்டக்குடி ஆகிய பேரூராட்சி ஓட்டு எண்ணும் மையங்களை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஒன்றியம்: 

        காட்டுமன்னார்கோவில் - ஆர்.சி., மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை-சி.முட்லூர் அரசு கல்லூரி, விருத்தாசலம்-அரசு கல்லூரி, கம்மாபுரம்-வடலூர் வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளி, மங்களூர்-திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

நகராட்சி: 

                பண்ருட்டி-பண்ருட்டி சுப்ராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம்-விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

பேரூராட்சி: 

           குறிஞ்சிப்பாடி, வடலூர்-குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. திட்டக்குடி, பெண்ணாடம்-திட்டக்குடி அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளி. அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் குடிநீர், கழிவறை, மின் விளக்கு, ஒலிப்பெருக்கி வசதிகள் மற்றும் பாதுகாப்பிற்காக கம்பி வேலி மற்றும் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது என செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior