உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 23, 2011

கடலூர் மாவட்டத்தில் 5 நகராட்சிகளிலும் அதிமுக வெற்றி

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், பண்ருண்டி, நெல்லிகுப்பம், விருத்தாசலம் ஆகிய 5 நகராட்சிகளையும் அதிமுகவே கைப்பற்றியுள்ளது.  

 விருத்தாசலம்:  

            விருத்தாசலம் நகராட்சியை முதல்முறையாக அதிமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  இதன்மூலம் விருத்தாசலம் நகராட்சியை முதன்முதலில் அதிமுகவுக்கு வெற்றி தேடி தந்த பெருமையை வேட்பாளர் ஆர்.டி.அரங்கநாதன் பெற்றுள்ளார்.  வெள்ளிக்கிழமை காலை வாக்கு எண்ணிக்கையின் தொடக்கமாக அஞ்சல் வாக்கு எண்ணப்பட்டது. இதில், பதிவான 454 வாக்குகளில், 180 வாக்குகளைப் பெற்று, அதிமுக முதல் இடத்தைக் கைப்பற்றியது.  இதைத் தொடர்ந்து அதிமுக தொடர்ந்து அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்து, திமுகவைவிட 4,627 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிகனியை அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ரங்கநாதன் பெற்றார்.  திமுக வேட்பாளர் தட்சிணாமூர்த்தி 9,230 வாக்குகளை பெற்றார்.    

சிதம்பரம் 

            சிதம்பரம் நகராட்சித் தலைவராக அதிமுக வேட்பாளர் நிர்மலா சுந்தர் 6,988 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு மொத்தம் 8 பேர் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் நிர்மலா சுந்தர் 16,318 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  

வாக்கு விவரம்:  

மொத்த வாக்குகள்-32,459, செல்லாத வாக்குகள்-14. 

 செ.எழில்மதி (திமுக) -9330  ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட்) -3017  டாக்டர் எஸ்.செந்தில்வள்ளி (காங்கிரஸ்) - 1445  எஸ்.நாகவள்ளி (பாமக) - 1174  கே.ஜோதிலட்சுமி (மதிமுக) - 696  சு.தனலட்சுமி (வி.சி.) - 319  எம்.மாலா (லோக் ஜனசக்தி) 160   

நெல்லிக்குப்பம் 

               நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.க. வேட்பாளர் எஸ். புகழேந்தியைவிட, அ.தி.மு.க. வேட்பாளர் சுதாகர் 4,299 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.  

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:  

சுதாகர் (அ.தி.மு.க.) 9,730  புகழேந்தி (தி.மு.க.) 5,431  பழநிவேல் (சுயே) 3,314  ஆரோக்கியராஜ் (வி.சி.கே.) 2,939  கவிதா (தே.மு.தி.க.) 2,580  மீண்டசெல்வம் (காங்கிரஸ்) 1055  பாலன் (ம.தி.மு.க.) 438  காமராஜ் (பகுஜன் சமாஜ்) 227  
 
கடலூர் 

               கடலூர் நகராட்சித் தலைவராக சி.கே.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.) வெற்றி பெற்றார். அவர் தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராஜாவை 18,117 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். கடலூர் நகராட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஆணையர் மா.இளங்கோவன் தலைமையில் டவுன்ஹாலில் வெள்ளிக்கிழமை நடந்தது. மொத்தம் 13 சுற்றுக்கள் எண்ணப்பட்டன. அனைத்து சுற்றுக்களிலும் சி.கே.சுப்பிரமணியன் அதிக வாக்குகள் பெற்று, முன்னணியில் இருந்தார். 

              நிறைவாக 18,117 வாக்குகள் வித்தியாசத்தில், சி.கே.சுப்பிரமணியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: 

 மொத்த வாக்குகள்: 1,05,868  பதிவானவை 79,442. 

                சி.கே.சுப்பிரமணியன் (அ.தி.மு.க) 39,634.  கே.எஸ்.ராஜா (தி.மு.க.) 21,517  செ.தனசேகரன் (மார்க்சிஸ்ட்) 5,348  தாமரைச்செல்வன் (வி.சி.) 4,799  ஏ.எஸ்.சந்திரசேகர் (காங்கிரஸ்) 4,219  ஏ.கே.சேகர் (ம.தி.மு.க.) 1,254  பி.செல்வம் (பா.ஜ.க.) 1,050  கலியபெருமாள் (சுயே) 868  ரவிசங்கர் (சுயே) 425  பால்ராஜ் (சுயே) 

328  வார்டுகள்: 

            கடலூர் நகராட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 45 வார்டுகளில் 26 வார்டுகளை அ.தி.மு.க.வும், 7 வார்டுகளை சுயேச்சை வேட்பாளர்களும், 5 வார்டுகளை தி.மு.க.வும், 3 வார்டுகளை பா.ம.க.வும், 2 வார்டுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. தலா ஒரு இடத்தையும் கைப்பற்றின.    

பண்ருட்டி 

            பண்ருட்டி நகராட்சித் தலைவர் பதவியை முதல்முறையாக அதிமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக வேட்பாளர் பி.பன்னீர்செல்வம் 8,321 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  நகராட்சியில் மொத்தம் உள்ள 38,977 வாக்காளர்களில் 32,832 பேர் வாக்களித்தனர் (தபால் வாக்கு 181 சேர்த்து).  வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முதல் அதிமுக உறுப்பினர் பி.பன்னீர்செல்வம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தார். மொத்தம் 14,790 (தபால் வாக்கு 106 சேர்த்து) வாக்குகள் பெற்று 8,321 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.   திமுக வேட்பாளர் ஆனந்திசரவணன் 6,469 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், காங்கிரஸ் வேட்பாளர் பஞ்சவர்ணம் 6,160 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், தேமுதிக வேட்பாளர் டாக்டர் அறிவொளி 4,680, விடுதலைச் சிறுத்தை வேட்பாளர் லட்சுமணன் 232, மதிமுக சிவசங்கர் 168, ஐ.ஜே.கே வேட்பாளர் வரதராஜன் 141, புதிய தமிழகம் சண்முகம் 136, சுயேச்சை வேட்பாளர் நிர்மலா 56 வாக்குகளை பெற்றனர்.










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior