உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 23, 2011

கடலூர் நகராட்சித் தலைவர் பதவியை 40 ஆண்டுகளில் முதல்முறையாக கைப்பற்றியது அ.தி.மு.க.

கடலூர்:

           கடலூர் நகராட்சித் தலைவர் பதவியை கடந்த 40 ஆண்டுகளில் அ.தி.மு.க. முதல்முறையாக தற்போது கைப்பற்றி இருக்கிறது.  

               மக்கள் நேரடியாக வாக்களித்த இத் தேர்தலில் கடலூர் நகராட்சித் தலைவர் பதவியை அ.தி.மு.க. (சி.கே.சுப்பிரமணியன்) கைப்பற்றியது.  கடலூர் நகராட்சி 1971-க்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி வசமே இருந்தது.  1986ல் முதல் முறையாக மக்கள் நேரடியாக வாக்களித்து நகராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்றப்பட்டது. அப்போது கே.எம்.சுந்தரம் கடலூர் நகராட்சித் தலைவராக தி.மு. க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  ஆனால் 6 ஆண்டுகள் தலைவர் பதவி வகித்த அவர், கடைசி 2 ஆண்டுகள் அ.தி.மு.க.வுக்கு கட்சி மாறினார்.  

               அதன்பிறகு கடலூர் நகராட்சித் தலைவராக இருந்த அனைவருமே தி.மு.க. வைச் சேர்ந்த  வர்கள்.  தற்போது முதல்முறையாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.கே. சுப்பிரமணியன், மக்களால் நேரடியாக வாக்களிக்கப்பட்டு நகராட்சித் தலைவராக வெற்றி பெற்று இருக்கிறார்.















0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior