உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 19, 2011

விருத்தாசலத்தில் அதிகரித்து வரும் தொடர் கொள்ளைகள்: வியாபாரிகள் பீதி

விருத்தாசலம்:
           விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் தென் எழிலன். இவர் அதே பகுதியில் மருந்துகடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலையில் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த தென் எழிலன் கடைக்குள் சென்று பார்த்தார். கடை மேஜையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதேபோல் விருத்தாசலம் சந்தை பகுதியில் உள்ள 2 மருந்து கடைகளிலும் நேற்று இரவு கொள்ளை நடந்தது தெரியவந்துள்ளது.

              விருத்தாசலம் சந்தை பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருபவர் ஜபிபூர் ரகுமான். இவரது கடையில் நேற்று நள்ளிரவு பூட்டை உடைத்து மர்ம கும்பல் ரூ.4 ஆயிரம் கொள் ளையடித்து விட்டு தப்பியது. அந்தகடைக்கு அருகில் உள்ள செல்போன் கடையிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அதே பகுதியில் சதீஷ்நாராயணன் என்பவரது மருந்து கடையிலும் நேற்று இரவு பூட்டை உடைத்து ரூ.2500 கொள்ளை நடைபெற்றுள்ளது. 3 மருந்துகடைகளில் நடைபெற்றுள்ள கொள்ளை குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

             போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை நடந்த கடைகளுக்கு தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து சென்றனர். அந்த 3 கடைகளிலும் பதிவாகியிருந்தரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அந்த கடைகளுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.   ஒரேநாளில் நள்ளிரவில் 3 மருந்துகடைகளில் கை வரிசை காட்டி தப்பிய கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  இந்த துணிகர கொள்ளை சம்பவங்கள் விருத்தாசலம் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி யுள்ளது. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior