உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 19, 2011

சிதம்பரம் அரசு நந்தனார் மேல் நிலைப்பள்ளி மாணவர் விடுதியில் தற்கொலை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/4854e717-d97e-4e5e-9fe8-303b9e9d9d9a_S_secvpf.gif
 
சிதம்பரம்:

           சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு காலனியை சேர்ந்தவர் பாலையா. இவருக்கு 3 மகன்கள். இவர்களில் இளையமகன் விமல்ராஜா (வயது 17).   இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு நந்தனார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியிலேயே தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். நேற்று வகுப்புக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்தார். அப்போது விடுதிக்கு ரோந்து வந்த தலைமை ஆசிரியர் பன்னீர் செல்வம், விமல்ராஜாவை பார்த்துவிட்டார். அவர் விமல்ராஜாவை கண்டித்தார்.

                       கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்தார். இதனால் பயந்துபோன விமல்ராஜா நேற்று இரவு விடுதியில் உள்ள உணவு கூடத்தில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வியாழக்கிழமை   காலை அவர் தூக்கில் தொங்கியதை மற்ற மாணவர்கள் பார்த்தனர். உடனடியாக அவர்கள் விடுதி வார்டனுக்கும், தலைமை ஆசிரியருக்கும் தெரிவித்தனர். அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

              சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு துரை, இன்ஸ்பெக்டர் சதிஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விமல்ராஜா பிணத்தை கயிற்றில் இருந்து கீழே இறக்கினார்கள்.   பின்னர் ஆம்புலன்சை வரவழைத்து உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல முயற்சி செய்தனர். இதற்கிடையே விமல்ராஜா விடுதியில் தற்கொலை செய்து கொண்ட தகவல் சிதம்பரம் நகரம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. அந்த பள்ளியில் படித்த மாணவர்களும், பெற்றோர்களும், ஏராளமான பொதுமக்களும் பள்ளியில் திரண்டனர். அவர்கள் விமல்ராஜா உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லவிடாமல் ஆம்புலன்சை தடுத்து நிறுத்தினார்கள்.

             ஆம்புலன்சில் இருந்த விமல்ராஜா உடலை கீழே இறக்கி பள்ளி வளாகத்தில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சிதம்பரம் - சீர்காழி சாலைக்கு வந்து மறியல் செய்தனர்.   இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு சென்ற துணைக்கலெக்டர் இந்துமதி, தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் சிதம்பரம் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
 
 
 
 
 
 

1 கருத்துகள்:

  • திண்டுக்கல் தனபாலன் says:
    22 நவம்பர், 2011 அன்று 10:09 PM

    வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior