கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளேரிபட்டு ஊராட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பக்கிரி வரவேற்றார். விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 305 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மடிகணினி, முதியோர், மீனவர் உதவித்தொகை, ஆடு, மாடு உள்பட பல்வேறு திட்டங்கள் வழங்குவேன் என கூறினார். இதன்பின் தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் 7 கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார்.
இதில் விலையில்லா அரிசி மற்றும் விலையில்லா திட்டங்கள் வழங்குவதற்கு சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையும் உருவாக்கினார். இதில் தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டில் 25 லட்சம் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படுகிறது. இவை 234 தொகுதிகளுக்கு வழங்கப்படும். இதில் முதலில் ஊராட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வழங்கி வரும் விலையில்லா பொருட்களுக்கு இரண்டு வருடத்திற்கு உத்தரவாதம் உள்ளது. விலையில்லா பொருட்கள் ஒரு மாதத்தில் பழுது ஏற்பட்டால் புதிய பொருட்கள் வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு பின்பு பழுதானால் பழுது பார்ப்பதற்காக சர்வீஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு தான் பெண் கஷ்டம் தெரியும் என்பதற்கு ஏற்ப முதல்வர் ஜெயலலிதா விலையில்லா பொருட்கள் வழங்கி வருகிறார். இத்துடன் இந்த பொருட்கள் அனைத்தும் தாய் வீட்டு சீதனமாக பெற்று கொண்டு பெண்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.சி. சம்பத் பேசினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை, பழனிசாமி, துணை தலைவர் பாலாம்பிகை, முத்துகுமாரசாமி, தாசில்தார் எழிலன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். மேலும் விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பெரியதம்பி விழா தொகுத்து வழங்கினார்கள்.
மாவட்ட கவுன்சிலர் அழகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, நகரமன்ற உறுப்பினர்கள் வக்கீல் பாலகிருஷ்ணன், கந்தன் மற்றும் ஆதிபெருமாள், ஜெயச்சந்திரன், ஜெயமூர்த்தி, ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வசந்த் நன்றி கூறினார். முன்னதாக மேல் அழிஞ்சுபட்டு ஊராட்சியில் 283 பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக