உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 28, 2011

கடலூர் மாவட்டத்தில் கனமழை : பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு

கடலூர்:
 
                 தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டியது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரம்பின.   அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 4,500 கனஅடி நீர் வரத்து அதிகரித்துள்ளது.

              ஏரியன் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஒடை வழியாக 2,500 கன அடிநீரும், வி.என்.எஸ். மதகு வழியாக 2,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மன வாய்க்காலில் இருந்து வரும் 12,500 கனஅடி தண்ணீர் சேர்ந்து பழைய கொள்ளிடத்தில் 15 ஆயிரம் கன அடியாக செல்வதால் கொள்ளிடம் கரை கிராமங்களான எடையார், திருநாரையூர், வீரநத்தம், நந்திமங்கலம், அத்திப்பட்டு கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.  

                 வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடையில் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வீராணத்தின் மேல்கரை கிராமங்களான சித்தமல்லி, பா.புத்தூர் குடிகாடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. சேத்தியாதோப்பு பாழ் வாய்க்கால் பகுதியில் ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்ட மதகு அருகில் கரையை உடைத்து வெள்ளாற்றில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  
             
                   வீராணம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் ஜெயங்கொண்டம் பொன்னேரியில் இருந்து உவரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கெங்கால் ஓடை, பாப்பாக்குடி, ஓடை, கடுவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு 4,500 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஒடை வழியாக வெளியேற்றப்படும் 2,500 கன அடியும், மன வாய்க்காலில் இருந்து வரும் 12,500 கனஅடி நீரும் ஆக மொத்தம் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒரே நேரத்தில் செல்வதால் சிறகிழந்த நல்லூர் கிராமத்திற்கு செல்லும் மூங்கில் பாலம் அடித்து செல்லப்பட்டது. அந்த கிராமத்திற்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

வீராணம் ஏரியில் உள்ள உபரிநீர் மற்றும் மணிமுத்தா நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோற கிராமங்களில் வசிப்பவர்கள் வெள் ளாற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர் மழையால் கொள்ளிடம் கரையோரம் உள்ள நந்திமங்கலம், வீரநத்தம், கிராமங்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். போலீஸ் சூப்பிரண்டு பகலவன் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உத்தரவிட்டார்.  

           இந்நிலையில் தற்போதிய பருவமழை காரணமாக சேலம் பகுதியில் அதிக மழை பெய்ததால் வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வெலிங்டன் ஏரிக்கு வரும் வாய்க்காலில் 2 ஆயிரத்து 918 கன அடியும், வெள்ளாற்றில் 3 ஆயிரத்து 75 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திட்டக்குடி பகுதியில் நேற்று இரவு தொழுதூரில் 145.3மி.மீ, பெலாந்துறையில் 112மி.மீ., கீழ்ச்செருவாயில் 150.2மி.மீ, மழை பெய்தது.

          இதனால் தற்போது வெலிங்டன் ஏரியில் 25.8 அடி தண்ணீர் பிடித்துள்ளது. அனைத்து துணை ஏரிகளும் நிரம்பி விட்டன.   வெலிங்டன் ஏரியின் பாசன ஆதாரமான அதர்நத்தம் கழுதூர் ஓடைகளில் தொடர் மழை காரணமாக வெள்ள வரத்து எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   குறிஞ்சிப்பாடியை அடுத்த கொளக்குடி, சிதம்பரம் அடுத்த வாழக்கொல்லை, துணிசரமேடு, முத்து கிருஷ்ணாபுரம், சேத்தியாதோப்பு அடுத்த மணல்மேடு, நெய்வேலி அடுத்த மேல்பாதி, குறிஞ்சி நகர், புது இளவரசன்பட்டு, பாப்பன்பட்டு, குமாராட்சி அடுத்த வீரநத்தம் கிராமங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் பள்ளி களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

            கடலூர் தாலுக்காவில் தொடர்ந்து பெய்த மழையால் 24 வீடுகளும், விருத்தாசலத்தில் 1 வீடும், குறிஞ்சிப்பாடியில் 2 வீடுகளும் சேதம் அடைந்தனர். சுவர் இடிந்ததில் கடலூரை சேர்ந்த கீர்த்தி, பில்லாலி கிராமத்தை சேர்ந்த அன்னக்கிளி, விருத்தாசலம் பவனூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல், பூமாலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.   தொடர்மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தா நீர் மட்டம் 35-50 அடியாக உயர்ந்துள்ளது.

          இதையொட்டி அணையில் 4,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் மணிமுத்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கல்வராயன்மலையில் பெய்த கனமழையால் கெடிலம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 5,140 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கம்மாபுரம் வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவான 5.5 அடியை எட்டியை நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வினாடிக்கு 3,015 கனஅடி பரவனாற்றில் வெளியேற்றப்படுகிறது.

                இந்த நிலையில் என்.எல்.சி. சுரங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பரவனாற்றில் கலப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior