உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், நவம்பர் 07, 2011

நெய்வேலி என்.எல்.சியில் மாநில இறகு பந்து போட்டி

நெய்வேலி:
           நெய்வேலியில் செயல்பட்டுவரும் மிகப்பழமையான மனமகிழ் மன்றம் தான் லிக்னைட் நகர் மன்றம். சுமார் 50 ஆண்டுகள் பழமையான இம்மன்றம், முன்பு பூங்கா நகர் மன்றம் என அழைக்கப்பட்டு தற்போது லிக்னைட் நகர்மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   இம்மன்றம், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து அவ்வப்போது மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது.

                 அந்த வகையில், தற்போது என்.எல்.சி. விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு இறகுபந்து சங்கம் மற்றும் கடலூர் மாவட்ட இறகு பந்து சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மாநில தரவரிசை இறகு பந்து போட்டிகளை நடத்தி வருகிறது. லிக்னைட் நகர் மன்றத்தில், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய தரத்திலான உள்விளையாட்டு அரங்கில், இப்போட்டிகள் தொடங்கியது.  

             நெய்வேலி, 25வது வட்டத்தில் அமைந்துள்ள லிக்னைட் நகர்மன்ற இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், என்.எல்.சி. மனிதவளத்துறை இயக்குனர் ஆச்சார்யா இப்போட்டிகளை தொடங்கி வைத்தார். லிக்னைட் நகர் மன்றத் தலைவர் சிவஞானம் வரவேற்றார். முடிவில் மன்ற செயலர் டாக்டர் சந்தானம் நன்றி கூறினார்.

             நிகழ்ச்சியில், இப்போட்டிகளுக்கான இணை இயக்குனர் சீனிவாஸ் அறிக்கை சமர்ப்பித்தார். தொடக்க விழாவில், என்.எல்.சி. மருத்துவமனை தலைமைப் பொது கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகசுந்தரம், லிக்னைட் மன்ற பொருளாளர் ஜெயசிங் டேனியல், இணை செயலர் பாலச்சந்தர், நிறுவனத்தின் நியமன உறுப்பினர் ரவிசங்கர், பயிற்சியாளர்கள், என்.எல்.சி. ஊழியர்கள், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.  

             இப்போட்டிகளுக்கான தலைமை நடுவராக, கோவையைச் சேர்ந்த வெங்கட் நாராயணன் தமிழ்நாடு இறகுபந்து சங்கம் நியமித்துள்ளது. அத்துடன் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து மேலும் ஏழு மாநில அளவிலான நடுவர்கள் அவருக்குத் துணையாகப் பணியாற்ற உள்ளனர். இப்போட்டிகளுக்கான இறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில், என்.எல்.சி. அதிபர் அன்சாரி பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்க உள்ளார். மொத்தம் ரூ. 98 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior