உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 12, 2011

கடலூரில் 107 பயனாளிகளுக்கு இலவச ஆடு மற்றும் கறவை மாடுகள்

கடலூர்:

          கடலூர் பகுதியைச் சேர்ந்த 107 பயனாளிகளுக்கு ஊரக தொழில் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் இலவச ஆடு மற்றும் கறவை மாடுகளை வழங்கினார்.

          கடலூர் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கீழ்அழிஞ்சிப்பட்டு, கரைமேடு, செல்லஞ்சேரி பகுதியில் பயனாளிகளுக்கு கறவை மாடுகளும், ஆடுகளும் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கீழ்அழிஞ்சிப்பட்டு, கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு தலா 50 கறவை மாடுகளும், செல்லஞ்சேரி கிராம பயனாளிகள் 57 பேருக்கு தலா நான்கு ஆடுகளும் வழங்கி அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார். 

                  அப்போது, பயனாளிகளே வெளி மாநிலங்களுக்குச் சென்று கறவை மாடுகளையும், ஆடுகளையும் தேர்வு செய்து வாங்கி வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் பால் வளம் பெருகுவதுடன், பயனாளிகளின் குடும்ப பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். இதன் மூலம் குழந்தைகளை நன்கு படிக்க வைக்கலாம் என்றார் அமைச்சர் எம்.சி.சம்பத்.மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். கால்நடைத் துறை மண்டல இயக்குநர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகாவைத்தியலிங்கம், ஒன்றியத் தலைவர் மணிமேகலைபழனிசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior