உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், டிசம்பர் 07, 2011

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் 6 தங்கம் வென்றனர்

கடலூர் : 

           சென்னையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் 6 தங்கம் வென்றனர். தென்மாநில நீச்சல் போட்டிக்கான தேர்வு போட்டி, மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னை, வேளச்சேரி நீச்சல் குளத்தில் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30 அணிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம் சார்பில் 12 பேர் பங்கேற்றனர். போட்டிகள் 7, 8, 10, 12, 14, 17 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் என 7 பிரிவுகளில் நடத்தப்பட்டது.

           கடலூர் சி.கே.பள்ளி மாணவி ரக்ஷனா 3 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் தலா ஒன்றும், செபி பிராங்களின் தங்கம், வெள்ளி, வெண்கலம் தலா ஒன்றும், டேவிஸ் நிரஞ்சன் தங்கம், வெள்ளி தலா ஒன்றும், 2 வெண்கலம் பெற்றனர். ஏ.ஆர்.எல்.எம். பள்ளி மாணவன் சுபாஷ்சந்தர் ஒரு தங்கம், அபிஷேக் ஒரு வெண்கலம் வென்றனர்.  புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி லட்சுமி சுவாதிகா மூன்று வெண்கலம், ஆரோ சைல்டு பள்ளி மாணவன் விமல் 2 வெண்கலம், அக்ஷரா வித்யாஷரம் பள்ளி மாணவன் சஞ் சய்பால் தினகர் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

            இவர்களின் சி.கே.பள்ளி மாணவன் செபா பிராங்களின் தென் மாநில போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டார். மாணவி ரக்ஷனா தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த மாணவ, மாணவிகளை கலெக்டர் அமுதவல்லி பாராட்டினார். பி.ஆர்.ஓ., முத்தையா, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், நீச்சல் பயிற்சியாளர் அருணா உடனிருந்தனர்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior