உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், டிசம்பர் 06, 2011

பெண்ணாடம் ரயில் நிலையத்தில் கணினி முன்பதிவு மையத் திறப்பு விழா

விருத்தாசலம்:

          பெண்ணாடம் ரயில் நிலையத்தில் கணினி முன்பதிவு மையத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

மையத்தை திறந்து வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி பேசியது:

           இங்கே பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் நான் உதவியாக இருப்பேன். விரைவு வண்டிகள் இங்கே நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. மீட்டர் கேஜ் ரயில்கள் நின்ற இடங்களில் எல்லாம், அகல பாதைகளாக மாற்றப்பட்டுள்ள ரயில்கள் நிற்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. 

            இதற்கும் அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும். இப்போது பஸ் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். எனவே இதுபோன்ற முக்கிய நிறுத்தங்களில் ரயில்கள் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், விருத்தாசலத்திலிருந்து சேலம் செல்லும் ரயிலை கடலூர், விருத்தாசலம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பலர் பயனடைவார்கள் என்றார்.

         திருச்சி கோட்ட மேலாளர் வைத்தியலிங்கம் வரவேற்றார். திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் க.தமிழழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பெண்ணாடம் பேரூராட்சித் தலைவர் மதியழகன், பொன்னேரி ஊராட்சித் தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior