உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், டிசம்பர் 05, 2011

கடலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டி பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் வரவேற்பு

கடலூர்:

          கடலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் கடலூர் இசைப்பள்ளியை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
இது குறித்து கலைபண்பாட்டு மையம் மண்டல உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் சவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக, குழந்தைகளிடம் மறைந்து கிடக்கும் ஆக்கப்பூர்வமான கலைகளை வெளிக்கொண்டு வர, அரசு ஒவ்வொரு ஆண்டும் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைப் போட்டிகளை நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வருகிறது. மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்க கலைப்போட்டிகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.நடனப்போட்டி: பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்பட பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை.

குரலிசைப்போட்டி: 

              கர்நாடக இசை, தேசியப்பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி, நாட்டுப்புறப் பாடல்களை பாட வேண்டும்.ஓவியப்போட்டி: 40க்கு 30 செ.மீ., அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்ட்டிங் என எந்த வகையிலும் ஓவியங்கள் அமையலாம். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.

              மாவட்ட கலைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற சிறார்கள் மாநில அளவிலான கலைப்போட்டியில் சவகர் சிறுவர் மன்ற செலவிலேயே பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் படிப்புச் சான்றிதழ்களுடன் 

கடலூர் புதுப்பாளையம், 
மாவட்ட இசைப்பள்ளியை அணுகவும்.

1 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior