உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 01, 2011

பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/dc71a308-b2e2-4f6f-96cf-cbb8f1893306_S_secvpf.gif
 
பண்ருட்டி

          கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வேகாகொல்லை பகுதியை சேர்ந்தவர் தெய்வலிங்கம் (வயது 33). விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (30).இவர்களுக்கு காவியா (7) என்ற மகளும், கலை முருகன்(5) என்ற மகனும் இருந்தனர்.
 
         நேற்று  காலை வேகாகொல்லையில் உள்ள முந்திரி தோப்பில் தெய்வலிங்கம், கலைச் செல்வி, காவியா, கலை முருகன் ஆகிய 4 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். இதைப் பார்த்த ஊர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காடாம் புலியூர் போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தன.

           தெய்வலிங்கம் விவசாயம் செய்து வந்தார். விவசாயத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. ரூ.2 லட்சம் கடன் ஏற்பட்டது. அதை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் கடந்த வாரம் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தற்கொலை செய்ய முயன்றார். அருகில் உள்ளவர்கள் தடுத்ததால் அந்த முயற்சியை கைவிட்டார். நேற்று முன்தினம் மனைவியையும் குழந்தைகளையும் ஊருக்கு செல்வதாக கூறி ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். முந்திரி தோப்பில் 2 குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கவிட்டார். பின்னர் கணவன்- மனைவியும் தனித்தனியாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

           தெய்வலிங்கம் தற்கொலை செய்வதற்கு முன்பு, ஒரு நோட்டில் எழுதி அதை  முந்திரி தோப்பு மரக்கிளையில் வைத்து இருந்தார். நேற்று முன்தினம்  பெய்த மழையினால் அந்த நோட்டில் எழுதி வைத்திருந்த எழுத்துக்கள் பாதி அழிந்து விட்டன. எனவே அதில் அவர் என்ன எழுதி உள்ளார் என்பது சரியாக தெரியவில்லை. குடும்பத்துடன் தெய்வ லிங்கம் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து கண்ணீர் சிந்தினர். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. வேகாகொல்லை பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior