கடலூர் :
"தானே' புயலால் சேதமடைந்த பின்னர் முதுநகர் பெண்கள் மேல்நிலையில் பள்ளியில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் சம்பத், சிறப்பு அதிகாரி மற்றும் கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பள்ளிக் கட்டடங்கள் சீரமைக்கும் பணி பொதுப்பணித்துறை மூலம் நடந்து வருகிறது. கடலூர் முதுநகர் பெண்கள் மேல்நிலையில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் சம்பத், புயல் நிவாரண சிறப்பு அதிகாரி அரசு செயலர் ககன்தீப்சிங் பேடி, கலெக்டர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.நகர மன்ற துணைத் தலைவர் குமார், கவுன்சிலர் கந்தன், கமிஷனர் வரதராஜன், சிறப்பு அதிகாரி இளங்கோவன், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் பிரேம்சந்த், செல்வராஜ், ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறியது:
புயலில் பள்ளி, அங்கன்வாடி, சத்துணவு கட்டடங்கள் அரசு அலுவலகங்கள் சேதமடைந்தன. இதில் பொதுப்பணித் துறை சார்பில் 28 பள்ளிக் கட்டடங்கள் தற்காலிகமாக 74.88 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் புயலினால் சேதமடைந்த 316 பள்ளிகளையும் சீரமைக்க 2.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேதமான 81 சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி கட்டடங்களை சரி செய்ய 34 லட்சம் செலவில் பணிகள் நடந்து வருகிறது.
ஒன்றிய அலுவலகப் பகுதியில் சேதமடைந்த 128 கட்டடங்களை சீர மைக்க 1.06 கோடியும், சேதமடைந்துள்ள 103 கட்டடங்களை சீரமைக்க 77.36 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.உள்ளாட்சி பகுதியில் உள்ள சேதமடைந்த அரசு கட்டடங்களை பொது நிதியிலிருந்து சீரமைத்துக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக