உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 24, 2012

விவசாயிகளுக்கு அஞ்சல் வழியில் இளநிலை பண்ணை தொழில் நுட்ப படிப்பு அறிமுகம்

         கோவை விவசாய பல்கலை, விவசாயிகளுக்கு அஞ்சல் வழியில், 50 சதவீத கல்வி கட்டணத்தில் இளநிலை பண்ணை தொழில் நுட்ப பாடத்திட்டத்தை துவக்கியுள்ளதாக, துணைவேந்தர் முருகேசபூபதி தெரிவித்தார்.
 
கோவை விவசாய பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி அறிக்கை :
 
             அரசின், உழவர் தின பரிசாக இப்புதிய படிப்பின், 2ம் ஆண்டு சேர்க்கை, ஜன.,15 முதல் துவங்கியுள்ளது. இதில் சேர, விவசாயிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 27வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். 
 
விண்ணப்பத்தை விவசாய பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், விவசாய அறிவியல் நிலையங்களில், 100 ரூபாயை செலுத்தி பெறலாம். அல்லது 
 
இயக்குனர், 
தமிழ்நாடு விவசாய பல்கலை, 
கோவை 
 
என்ற முகவரிக்கு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பல்கலை கிளையில், பெறத்தக்க வகையில் டி.டி., எடுத்து அனுப்பலாம். 
 
மேலும் விவரங்களுக்கு, 
 
94421 11058, 48 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 
 
இவ்வாறு முருகேசபூபதி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior