உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, ஜனவரி 07, 2012

சிதம்பரம் வேளங்கிராயன்பேட்டை கடற்கரை அருகே இளம் பெண் சடலம்

     சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வேளங்கிராயன்பேட்டை கடற்கரையோரம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஆடையற்ற நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளது. இறந்து கிடந்த பெண் யார் எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.

           இளம்பெண்ணின் சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வில்லியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து இறந்து போன இளம்பெண் யார் என்றும், அவர் மானபங்கப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior