உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 06, 2012

தானே புயல் நிவாரணப் பணிகள் மந்தம் : பண்ருட்டி தே.மு.தி.க. சட்ட மன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து உண்ணாவிரதம்


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/9d545577-a065-4d99-a302-c78d420fab03_S_secvpf.gif
 
 
பண்ருட்டி:
 
           கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் தானே புயல் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என தெரிவித்து பண்ருட்டி தொகுதி தே.மு.தி.க. சட்ட மன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து நேற்று மாலை 6 மணியளவில் பண்ருட்டி பஸ் நிலையம் எதிரே திடீரென் உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கினார்.

            உண்ணாவிரத போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சேகர், வட்ட செயலாளர் துரை, தே.மு.தி.க. அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் தண்டபாணி, நெல்லிக் குப்பம் நகர செயலாளர் கஜேந்திரன், பண்ருட்டி நகர அவைத் தலைவர் குமார், மாவட்ட இளை ஞரணி துணை செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி செயலாளர் வசந்த், தொழிற்சங்க செயலாளர் பன்னீர்செல்வம், கேப்டன் மன்ற செயலாளர் சபீர், மாவட்ட மகளிரணி தலைவி பானுமதி, நகர மகளிர் அணி வசந்தா ஆகியோர் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர்.

               தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் அனந்தராம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று எம்.எல்.ஏ.யுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பண்ருட்டி பகுதி யில் நிவாரணத்தொகை ஒரே மாதிரியாக வழங்கப்படவில்லை என்றும், நிவாரணம் வழங்குவது குறித்து சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறிய அவர் இதுகுறித்து பேச உடனே தாலுகா அலுவலகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கூறினார்.

             அனைத்துக்கட்சி கூட்டத்தை வருகிற செவ்வாய்க்கிழமை நடத்தலாம் என்று கலெக்டர் கூறியதாக தாசிலதார் தெரிவித்தார். ஆனால் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ அதற்கு சம்மதிக்கவில்லை. அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டவேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.   தொடர்ந்து உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர்.  அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக நள்ளிரவு 12 மணி அளவில் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சேகர், தே.மு.தி.க மாவட்ட மாணவரணி செயலாளர் வசந்த், மருத்துவர் அணி செயலாளர் அறிவொளி உட்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior