உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

ஞாயிறு, ஜனவரி 08, 2012

தானே புயல் : நவீன பயிர் சாகு படி முறையை எதிர் பார்க்கும் கடலூர் மாவட்ட மக்கள்

 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_381964.jpg

                 தானே புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தில், பலா, முந்திரி உள்ளிட்ட பல ஆண்டு ஆயுட்காலம் கொண்ட மரங்கள் வேரோடு சாய்ந்தும், கருகியும் விட்டதால், மரம் அறுக்கும் பணிகளுக்கு ஆள் கிடைக்காத நிலை உள்ளன. கோடரி மற்றும் மரம் அறுக்கும் வாள் விற்பனையும் சூடுபிடித்துள்ளன. "தானே"  புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மற்றும் நாகை மாவட்டங்களில், விவசாயிகளுக்குச் ‌செல்ல முடியாத துயரம் ஏற்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் வளர்க்கப்பட்ட பலா, முந்திரி ஆகிய மரங்கள், புயல் காற்றிற்கு தாக்குப்பிடிக்க முடியாமல், இலைகள் உதிர்ந்து கருகி நிற்கின்றன.

           தென்னை மரங்கள் தலை துண்டாகிய நிலையிலும், குலைகளுடனும் சாய்ந்தும், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. பல தோப்புகளில், தென்னை மரங்களிலிருந்து விழுந்து கிடக்கும் அரைகுறை விளைச்சல் தேங்காய்களை , போவோர், வருவோரல்லாம் பொறுக்கி செல்கின்றனர். தற்போது, சின்னாபின்னமாகக் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டியது விவசாயிகளின் பெரும் பணியாக உள்ளது. மரத்தை விட அறுப்பு கூலி அதிகம்.

இதுகுறித்து, சேத்தங்குப்பம் பகுதியைச் சேர்ந்த, முந்திரி விவசாயி ராமமூர்த்தி கூறியது:

             ஒரு மரத்திலிருந்து, குறைந்தது நான்கு மூட்டை முந்திரி விற்பனை. ஒவ்வொரு மூட்டையிலும், 4,800 ரூபாய்மதிப்பு கொண்ட, 80 கிலோ முந்திரி இருக்கும். இந்த அடிப்படையில், ஒரு மரத்திற்கு ஆண்டுக்கு குறைந்தது, 20 ஆயிரம் ரூபாய்க்கு முந்திரி கிடைக்கும். தற்‌போது, எங்கள் மாவட்டத்தில் மட்டும், பல லட்சம் முந்திரி மரங்கள் காற்றில் நாசமாகிவிட்டன. பல கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளன. மரங்களை அறுத்து அப்புறப்படுத்த பல நாட்களாகும். மரம் அறுக்க ஆட்கள் கிடைப்பதில்லை. ஒரு தொழிலாளிக்கு, 400 ரூபாய் கூலி கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால், அவர் ஒரு நாள், 400 ரூபாய் கூலி கொடுத்து வெட்டப்படும் மரம், 150 ரூபாய்க்கு தான் விற்பனையாகிறது. இதனால், பலர் மரங்களை அறுக்காமல் அப்படியே விட்டு வைத்துள்ளனர்.இவ்வாறு, ராமமூர்த்தி கூறினார்.

கோடரி விற்பனை அதிகம்:

              மரங்களை அறுக்கும் பணி தீவிரமாக உள்ளதால், புயல் பாதித்த மாவட்ட சந்தைகளில், மரம் அறுக்கும் கோடரி மற்றும் வாள் விற்பனை சூடுபிடித்துள்ளன. ஆங்காங்கே, வட மாநிலத்தவர் முகாமிட்டு திடீர் கோடரி கடைகளை பரப்பியுள்ளனர். நான்கு கிலோ எடை கொண்ட ஒரு கோடரி, 600 ரூபாய்க்கும், வாள் ஒன்று, 250 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் திரளாக வாங்கிச் செல்கின்றனர்.


அரச மரக்கன்று தருமா?
 
             பாலைவனமாகிப்போன, முந்திரி காட்டுப்பகுதி நிலத்தை மீண்டும் பண்படுத்தி, அவற்றில் விதை போட்டு வளர்க்க பல காலம் பிடிக்கும். எனவே, அரசின் தோட்டக்கலை மற்றும் விவசாயத் துறை சிறப்பு திட்டமிட்டு, முந்திரி கன்றுகள் வளர்த்து கொடுக்க வேண்டிய நிலை உள்ளன. அரசின் சிறப்பு திட்டமின்றி, இந்தப் பகுதியில், பலா, முந்திரி விவசாயம் இனி, தழைக்க வழியில்லை என்பதே, விவசாயிகளின் கருத்து
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior