கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் காரணமாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஏற்பட்ட பாதிப்புக் குறித்து கணக்கெடுப்பு செய்து நிவாரணத் தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு தானே புயலால் சேதமடைந்த சவுக்கு மரங்களுக்கும் இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடார்ந்து அவர்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை மூலம் தல ஆய்வு செய்து 50 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்த சவுக்கு மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7500 வீதம் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
எனவே தானே புயலால் பாதிப்படைந்த சவுக்கு மரப்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அவர் தொரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக