உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 17, 2012

பண்ருட்டியில் தானே புயலால் சேதம் அடைந்த முந்திரி மரங்களை அகற்றும் பணி தீவிரம்

கடலூர்:
 
            கடலூர் மாவட்டம் மேலிருப்பு கிராமத்தில் தானே புயலினால் சேதமடைந்த முந்திரி மரங்களை சங்கிலி ரம்பக் கருவிகள் பயன்படுத்தி அகற்றும் பணியை மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  
 
           புயலினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முந்திரி விவசாயிகளின் நலனுக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிர் சேத நிவாரணத்தோடு, முந்திரி பயிர்களை மீண்டும் பயிர் செய்வதற்கு விலை ஏதுமின்றி மரக்கன்றுகள் வழங்கப்படும் என்றும், அந்த மரக்கன்றுகளை பராமரிப்பதற்கான பராமரிப்பு செலவுகளையும், விவசாயப் பணிகளுக்கான செலவுகளையும், 5 ஆண்டு காலத்திற்கு அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
 
           மேலும் முந்திரி மற்றும் பலா தோப்புகள் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், விழுந்த மரங்களை அகற்றிட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு, ஏற்படும் 6,000 ரூபாய் செலவினம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
 
          இந்த மரங்களை வெட்டுவதற்குத் தேவையான சங்கிலி ரம்பக் கருவிகள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும் என்று கூறினார்.
 
          இவ்வாறு வெட்டப்பட்ட மரங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ளும். மரங்கள் வெட்டி எடுக்கப்பட்ட பின், அடிக்கட்டையையும் அகற்றிய பின்னரே அத்தோட்டங்களில் உழவுப் பணியும், ஊடுபயிர் சாகுபடியும் மேற்கொள்ள இயலும் என்பதால், அடிக்கட்டை அகற்றும் பணி எந்திர உதவியுடன் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.  
 
          இதனடிப்படையில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேலிருப்பு ஊராட்சியில் தானே புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி மரங்களை அகற்றி, விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு முன்மாதிரி பணி நடைபெற்றது. முதல் நாளன்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை கொண்டு மரத்தில் உள்ள சிறு கிளைகள் அகற்றப்பட்டன.
 
        புதன் கிழமை  மேலிருப்பு கிராமத்தில் ராஜாராமன் என்பவரது முந்திரி தோப்பில் முற்றிலும் அழிந்த நிலையில் உள்ள முந்திரி மரங்களை சங்கிலி ரம்பக் கருவிகள் மூலம் வெட்டி எடுத்து அகற்றும் பணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பார்வையிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior