உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 16, 2012

கடலூர் மாவட்டத்தில் மின்வெட்டு எதிரொலி: ஜெனரேட்டர், இன்வெர்ட்டர்கள் விலை அதிகரிப்பு


தொலைக்காட்சி போன்ற காரணங்களால், வீடுகளுக்கு இன்வெர்ட்டர்கள், ஜெனரேட்டர்கள் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் வந்துவிட்டன. புதிதாக வீடு கட்டுவோர் கட்

கடலூர்:'

'             மின்சாரத்துக்கான இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் போன்ற மாற்று சாதனங்கள் விற்பனை மற்றும் விலை, கடந்த 2 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்து இருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே மின் பற்றாக்குறை உள்ளது. இதனால் நாளொன்றுக்கு ஒருமணி நேரம் இருந்த மின்வெட்டு, இன்று 8 மணி நேரமாக அதிகரித்து விட்டது. 

            மின் வெட்டு நேரம், மின்வாரியம் அறிவித்த நேரங்களைவிட, அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரம் அதிகம். மின்வெட்டால் தொழில் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் சொல்லொணா துயரம் அனுபவிக்கிறார்கள். மின் பற்றாக்குறையை உணர்ந்துள்ள பொதுமக்கள், மின்தடை நேரங்களை அறிவிப்பதை விடுத்து, எப்போது மின்சாரம் நிச்சயம் கிடைக்கும் என்பதை மின்வாரியம் அறிவித்தால் போதும் என்கிறார்கள். மின்சாரம் நிச்சயம் இருக்கும் நேரத்தை அறிவிக்க முடியாத மின்வாரியத்தால் பயனேதும் இல்லை என்கிறார்கள் பொதுமக்கள்.

            கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 20-க்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஆண்டுக்கு ரூ. 1,500 கோடிக்குமேல் மருந்துகள் மற்றும் ரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இவைகள் மின் வெட்டால் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கிறார் சிப்காட் தொழிற்சாலைகளின் தலைவர் இந்திரகுமார்.புயலுக்குப் பின், ஒரு மாதம் முற்றிலும் மின்சாரம் தடைபட்டது. தற்போது தினமும் பகலில் 2 மணி நேரம் மின்வெட்டு, மற்றும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை விளக்குகள் மட்டுமே எரியலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. சிப்காட்டில் பெரும்பாலும் ரசாயனத் தொழிற்சாலைகளாக இருப்பதால் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். ஒரு நிமிடம்கூட மின்சாரத்தை நிறுத்த முடியாது. இதனால் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 கோடி மதிப்பிலான ஜெனரேட்டர்களை பயன்படுத்துகிறோம். 

            மின்வாரியம் வழங்கும் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 5.50 என்றால் ஜெனரேட்டர் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 10 ஆகிறது. இதனால் பொருள்களின் உற்பத்திச் செலவு அதிகரித்து சர்வதேச சந்தையில் பொருள்களை நட்டத்துக்கு விற்க நேரிடுகிறது என்றார் அவர். 

              மின்வெட்டால் கடலூர் மாவட்டத்தில் 13 ஆயிரம் சிறுதொழில் கூடங்கள் நலிவடைவதாக மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கச் செயலாளர் கு.ராமலிங்கம் தெரிவித்தார் .புதுவை மாநிலத்தில் மின்தடை இல்லாததால், கடலூர் மாவட்ட சிறு தொழிற்சாலகளுக்குக் கிடைத்த ஆர்டர்கள் பல, புதுவைக்குச் சென்று விட்டன. சிறு தொழில்களில் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயக்கி லாபம் பார்க்க முடியாது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர். உரிமையாளர்கள் வங்கிக் கடன்களை செலுத்த முடியவில்லை என்றார் அவர். 

             மின்வெட்டைச் சமாளிக்க வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்வெர்ட்டர் மற்றும் ஜெனரேட்டர்களை பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். மாணவர்களின் படிப்பு தொலைக்காட்சி போன்ற காரணங்களால், வீடுகளுக்கு இன்வெர்ட்டர்கள், ஜெனரேட்டர்கள் அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் வந்துவிட்டன. புதிதாக வீடு கட்டுவோர் கட்டுமானச் செலவில் தற்போது இன்வெர்ட்டர் செலவையும் சேர்த்துவிட்டனர். 

               200 வி.ஏ. முதல் 800 வி.ஏ. வரையிலான (பாட்டரியுடன்) இன்வெர்ட்டர்களை வீடுகளில் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் விலை ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 17 ஆயிரம் வரை. டி.வி. உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் இயக்கும் வகையில் 1,500 வி.ஏ. திறன் கொண்ட இன்வெட்டர் விலை ரூ. 35 ஆயிரம் வரை. இன்வெட்டர்கள் விலை (பாட்டரியுடன்) கடந்த 2 ஆண்டுகளில் 50 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. பாட்டரிகள் விலை 40 சதம் உயர்ந்து இருக்கிறது. வணிக நிறுவனங்களில் 4,000 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் ஜெனரேட்டர்கள் (விலை ரூ. 24 ஆயிரம்) முதல், ஏ.சி. உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களையும் இயக்கும் நிறுவனங்கள் (துணிக்கடைகள், நகைக் கடைகள்), அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்களையும் (விலை ரூ. 5 லட்சம்) பயன்படுத்துகிறார்கள். இவற்றுக்கு பெட்ரோல், மண்ணெண்ணெய் அல்லது டீசல் செலவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகம். ஒவ்வொரு முறையும் அவற்றை இயக்க வேண்டும். 

            இன்வெர்ட்டர்கள் தானாக இயங்குபவை. பராமரிப்பது எளிது. மின்சாரம் இல்லாதபோது செலவிட்ட அனைத்து சக்தியையும், மின்சாரம் வந்ததும் இன்வெட்டர்கள் இழுக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால் இன்வெர்ட்டர்களை பயன்படுத்துவோருக்கு மின்கட்டடணச் செலவு அதிகரிக்கும் என்கிறார்கள் மின் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 














0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior