உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், பிப்ரவரி 23, 2012

குள்ளஞ்சாவடி அருகே இரண்டு டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

குறிஞ்சிப்பாடி:
 
          குள்ளஞ்சாவடி அருகே ஒரே நாள் இரவில் நகைக் கடை மற்றும் இரண்டு டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 
         குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 45. இவர் குள்ளஞ்சாவடி கடை வீதியில் நகை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவர் நேற்று காலை கடையைத் திறக்க வந்தபோது பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 77 கிராம் தங்க நகைகளும், 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 235 கிராம் வெள்ளி பொருட்களும் திருடு போயிருப்பது தெரியவந்தது.

         அதேப்போன்று, இதே வீதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கடைகளில் வைத்திருந்த ரொக்கப் பணம் 55 ஆயிரத்து 950 ரூபாய் திருடு போனது. இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் பார்த்திபன் மற்றும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் இருவர் என மூவர் கொடுத்த புகார்களின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து பூட்டை உடைத்துத் திருடிய மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior