உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து மணந்த கடலூர் இளைஞர்


 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_414184.jpgகடலூர் : 

         கடலூரைச் சேர்ந்த வாலிபர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து, இந்து முறைப்படி நேற்று திருமணம் செய்து கொண்டார்.

        கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் - அஞ்சுகமணி தம்பதியின் இளைய மகன் அன்புச் செல்வன். கடந்த 8 ஆண்டுகளாக, சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் தன் நண்பர்களுடன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற போது, அங்குள்ள பிலிப்பைன்ஸ் நேஷனல் பாங்க்கில் கிளை மேலாளராக பணியாற்றிய எட்னா கிறிஷ்டோபலுடன் பழக்கம் ஏற்பட்டது. அது, நாளடைவில் காதலாக மாறியது. ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து, இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு அன்புச்செல்வனின் குடும்பத்தார் சம்மதம் தெரிவித்தனர்.


         எட்னா கிறிஷ்டோபலின் பெற்றோர் இறந்து விட்டதால், அவரை வளர்த்த சித்தி பஷன்சியா கிறிஷ்டோபல் மறுத்து விட்டார். அதனால், அன்புச்செல்வன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்று எட்னா கிறிஷ்டோபலின் சித்தியிடம் சம்மதம் பெற்றார். அதைத் தொடர்ந்து, காதலி எட்னா கிறிஷ்டோபல் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கடந்த வாரம், தன் சொந்த கிராமத்திற்கு வந்த அன்புச்செல்வன், தன் காதலியின் பெயரை அருள்செல்வி என பெயர் மாற்றம் செய்தார். இந்த காதல் ஜோடிக்கு நேற்று காலை கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது. மணமகள் அருள்செல்வி என்ற எட்னா கிறிஷ்டோபல் இந்து மத முறைப்படி பட்டுப்புடவை உடுத்தி மண மேடைக்கு வந்தார். அவருக்கு அன்புச்செல்வன், மங்கள இசை முழங்க தாலி கட்டி, தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு அருள்செல்வி அளித்த பேட்டி 

         "நாங்கள்  இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டாக, உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். அன்புச்செல்வனை காதலிக்கத் துவங்கியதில் இருந்து, நான் இந்திய கலாசாரத்தை நேசிக்கத் துவங்கினேன். தமிழ் பேச கற்று வருகிறேன். என்னை வளர்த்த சித்தி மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. திருமணத்திற்காக என் வேலையை ராஜினாமா செய்து விட்டேன். நாங்கள் இருவரும் சில ஆண்டுகள் சிங்கப்பூரில் வசிக்க உள்ளோம். அதன் பிறகு, அன்புச்செல்வனின் சொந்த கிராமமான மூலக்குப்பத்தில் நிரந்தரமாக தங்க உள்ளோம்' என்றார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior