உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

விருத்தாசலம் அருகே ஆசிரியர் சேமநலநிதி கையாடல்

http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/ac5689fc-42fe-46a5-8218-0134d902ed4e_S_secvpf.gif
 
விருத்தாசலம்:
 
      விருத்தாசலம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35), விருத்தாசலம் அருகே கம்மாபுரத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி (32). கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களின் சம்பளபட்டியல் மற்றும் சேமநல நிதி பிரிவில் அறிவழகன் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
          அந்த அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர்கள் சேமநல நிதி கணக்கில் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 1-ந் தேதி அறிவழகன் `சஸ்பெண்டு' செய்யப்பட்டார். அதிகாரிகளின் விசாரணையில், ஆசிரியர்கள் சேமநல நிதி கணக்கில் சுமார் ரூ.30 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அந்தபணத்தை அறிவழகன் தனது மனைவி தேன்மொழி வங்கி கணக்கில் சேர்த்திருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து கடலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் உதவி தொடக்க கல்வி அதிகாரி வீரபாண்டியன் புகார் செய்தார். அதன்பேரில் அறிவழகனையும், தேன்மொழியையும் போலீசார் கைது செய்தனர். அறிவழகன் வீட்டில் இருந்து ரூ.15 லட்சத்து, ஆயிரம் மற்றும் 2 இருசக்கரவாகனங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், ஏ.டி.எம்.கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
 
          பின்னர் அவர்கள் 2 பேரும் விருத்தாசலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு உத்தரவை தொடர்ந்து கணவனும், மனைவியும் கடலூர் ஜெயிலில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டனர். ஆசிரியர்கள் சேமநலநிதி கணக்கில் நடந்த இந்த கையாடல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கையாடலின் பின்னணியில் அதிகாரிகள் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior