உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, பிப்ரவரி 25, 2012

சிதம்பரம் அரிமா சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி

சிதம்பரம்:

      சிதம்பரம் அரிமா சங்கம் சார்பில் 10 நாட்கள் புத்தக கண்காட்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார்.

        இன்ஜினியரிங் கல்லூரி கலையரங்கில் நேற்று துவங்கிய கண்காட்சி மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது. பல்கலைகழக துணைவேந்தர் ராமநாதன் திறந்து வைத்தார். அரிமா மாவட்ட துணை ஆளுனர் சுவேதகுமார், இன்ஜினியரிங் கல்லூரி புல முதல்வர் பழனியப்பன், பி.ஆர்.ஓ., செல்வம், அரிமா சங்கத் தலைவர் ரமேஷ் சந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

            கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்ற அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், அறிவியல், கவிதை, நாவல்கள், குழந்தை நூல்கள், சுய முன்னேற்றம் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் மாலை 3.30 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். சனி, ஞாயிறு கிழமைகளில் காலை 11 மணிக்குத் துவங்கும். ஏற்பாடுகளை புத்தக கண்காட்சிக்குழுத் தலைவர் வெங்கடேசன், செயலர் சண்முகசுந்தரம், பொருளாளர் அமிர்தகடேசன் உள்ளிட்ட குழுவினர் செய்துள்ளனர்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior