உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 25, 2012

ன்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

நெய்வேலி:

      மும்பையில் நடந்த உலக மனிதவள மேம்பாட்டு அமைப்பின் மாநாட்டில் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அண்மையில் வழங்கப்பட்டது.

இது குறித்து என்.எல்.சி. செய்தித் தொடர்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

        சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்கும் மனிதவளத்துறை நிபுணர்களை ஒருங்கிணைத்து பல்வேறு ஆக்கபூர்வ பணிகளை மேற்கொண்டு வரும் அமைப்புதான் உலக மனிதவள மேம்பாட்டு அமைப்பு. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மனிதவள மேம்பாடு தொடர்பான மாநாட்டை நடத்தி, மனிதவளத்துறையில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்த நிபுணர்களுக்கும், புதிய உத்திகளை அறிமுகப்படுத்தி வெற்றிகண்ட உயர் அதிகாரிகளுக்கும் சிறப்பு விருது வழங்கி கெüரவித்து வருகிறது.

         அந்தவகையில் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரி, என்.எல்.சி. நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதுமுதல் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடுக்கிவிட்டு உற்பத்தியை அதிவிரைவாக மேம்படுத்தி, பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 2-வது உயர்ந்தபட்ச தகுதியான நவரத்னா என்ற சிறப்பு நிலையை என்.எல்.சி. நிறுவனம் குறுகிய காலத்தில் பெற காரணமாக இருந்தவர் அன்சாரி.நிறுவனத்தில் ஊழியர்களிடையே நல்ல தொழில் உறவைப் பராமரித்து, சுரங்கங்களில் பழுப்பு நிலக்கரி உற்பத்தியிலும், அனல்மின் நிலையங்களில் மின்சக்தி உற்பத்தியிலும் புதிய சாதனைகளை நிகழ்த்தினார். இதன்மூலம் நிறுவனம் நிகர லாபம் ஈட்டுவதிலும் சாதனைபடைத்தது.

         இந்த சாதனைகளுக்காக உலக மனிதவள மேம்பாட்டு அமைப்பு ஏ.ஆர். அன்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது.இதற்கான விழா பிப்ரவரி 17 மற்றும் 18 தேதிகளில் மும்பையில் நடைபெற்றது. இதில் 2012-ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை ஏ.ஆர். அன்சாரி பெற்றுக்கொண்டார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior