உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, மார்ச் 17, 2012

என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் 10 தொழிற்சங்கங்கள் போட்டி

நெய்வேலி:

        என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் நெய்வேலியில் உள்ள 10 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.

        என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுவதையொட்டி, தேர்தலில் போட்டியிடும் தொழிற்சங்கங்களிடம் இருந்து விருப்பமனுவை மத்திய மண்டல தொழிலாளர் நல ஆணையர் எ.ஜெகன்நாதராவ் பெற்றார். இதையடுத்து விருப்பமனு வழங்கிய தொழிற்சங்கங்களை பரிசீலித்தப் பின்னர் தேர்தலில் போட்டியிடக் கூடிய 10 தொழிற்சங்கங்களையும், அதற்குண்டான தேர்தல் எண்ணையும் வெளியிட்டார்.

அதன்படி 

ஏ.ஐ.டி.யூ.சி., 
அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், 
சி.ஐ.டி.யூ., 
தொழிற்சங்கக் கூட்டமைப்பு, 
.டி.யூ.சி., 
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், 
மூவேந்தர் முன்னேற்றத் தொழிற்சங்கம், 
என்.எல்.சி. தொழிலாளர் ஒற்றுமை மையம், 
பாட்டாளித் தொழிற்சங்கம், 
தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் 

உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.

          இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐஎன்டியூசி, பிஎம்எஸ், எச்எம்எஸ் உள்ளிட்ட 4 தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரே அமைப்பாக போட்டியிடுகின்றன. இந்தத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், சனிக்கிழமை நெய்வேலி ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க வளாகத்தில் நடைபெறுகிறது.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior