கடலூர்:
அரசுப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, விண்ணப்ப மனுக்கள் விநியோகம், கடலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,894 பேர் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். இவர்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய இருக்கிறது. இதற்கான எழுத்துத் தேர்வு மே 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் விநியோகம், கடலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ. 50. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து, அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் விநியோகத்துக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கும் வருகிற 30-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகத்தை, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக