உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், மார்ச் 06, 2012

வீராணம் ஏரியில் தேசிய மீன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 22 லட்சம் மீன்குஞ்சுகள்

ஏரியில் மீன்குஞ்சுகளை விடும் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் (இடமிருந்து 3-வது).
சிதம்பரம்,:: 

          கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் தேசிய மீன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 22 லட்சம் மீன்குஞ்சுகளை விட, தமிழக மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது.  

        ஏற்கெனவே கடலூர் மாவட்டத்தில் வெலிங்டன் ஏரியில் 5 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.  வீராணம் ஏரியில் முதல் கட்டமாக மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளத் துறை இணை இயக்குநர் ஆறுமுகம் தலைமை வகித்தார். காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகமாறன் நிகழ்ச்சியில் பங்கேற்று 8 செ.மீ. அளவுள்ள 1.50 லட்சம் மீன்குஞ்சுகளை வீராணம் ஏரியில் விட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  

          ரோகு, கட்லா, மிர்ஜா, சாதா கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் விடப்பட்டன. சில தினங்களில் 22 லட்சம் மீன்குஞ்சுகள் முழுமையாக ஏரியில் விடப்படும்.  இந்த மீன்குஞ்சுகள் 2 மாதத்துக்குள் அரை கிலோ முதல் 2 கிலோ வரை வளர்ந்துவிடும் என இணை இயக்குநர் ஆறுமுகம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் கலியமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் கமலக்கண்ணன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.    

விவசாயிகள் வேதனை  

       தமிழக அரசு மீன்வளத் துறையினரால் ஆண்டுதோறும் வீராணம் ஏரியில் பெயரளவுக்கே மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன.  ÷கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே குறிப்பிட்ட காலங்களில் மீன்குஞ்சுகளை விட வேண்டும்.  ஆனால் இந்த ஆண்டு மீன்குஞ்சுகள் கோடை காலம் நெருங்கிய பிறகு காலதாமதமாக விடப்பட்டுள்ளன.  ÷இதனால் கோடைக் காலத்தில் ஏரியில் நீர்குறைந்து, மீன்கள் வளருவதற்குள் இறந்துவிடும். கடந்த ஆண்டு விடப்பட்ட மீன்குஞ்சுகள் அனைத்தும் இறந்து மிதந்தது என அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.     0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior