உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், மார்ச் 06, 2012

மாநில வாலிபால் போட்டியில் கடலூர் புனித வளனார் கல்லூரி அணிக்கு 3ம் இடம்

கடலூர்:

         மாநில வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு வாலிபால் சங்க மாநில பொதுச் செயலர் மார்ட்டீன் சுதாகர் பரிசு வழங்கினார்
 
        கல்லூரி மாணவர் அணிகளுக்கு இடையேயான 3 நாள் மாநில கைப்பந்துப் போட்டி, கடலூர் புனித வளனார் கலைக் கல்லூரியில் நடந்தது.இதில் 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதிப் போட்டியில் சத்யபாமா பல்கலைக்கழக அணி முதல் இடத்தையும், வேல்ஸ் பல்கலைக்கழக அணி 2-வது இடத்தையும், கடலூர் புனித வளனார் கல்லூரி அணி 3-வது இடத்தையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி 4-வது இடத்தையும் பெற்றது.பரிசளிப்பு விழா, மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் முன்னாள் எம்.எல்.சி.ஜெயச்சந்திரன், புனித வளனார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆக்னல் அடிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 
       சிறப்பு விருந்தினராக கடலூர் புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர்அடிகள் கலந்து கொண்டார்.வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை, தமிழ்நாடு வாலிபால் சங்க பொதுச் செயலர் மார்ட்டீன் சுதாகர் வழங்கினார். திருவள்ளுவர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் அ.அமல்தாஸ், துணை முதல்வர் எம்.அருமைச்செல்வம், மாவட்ட வாலிபால் சங்க செயலர் ஏ.முரளிதாஸ் ஆகியோர் வாழ்த்தினர்.போட்டிக்கான ஏற்பாடுகளை, வளனார் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராஜமாணிக்கம், பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் உள்ளிட்ட அமைப்புக் குழுவினர் செய்து இருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior