உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், மார்ச் 28, 2012

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க கோரிக்கை

கடலூர்:

   அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், கடலூரில் தெருமுனைப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
 

    அடிக்கல் நாட்டப்பட்ட கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். நிதி ஒதுக்கப்பட்டும் தொடங்கப்படாமல் இருக்கும் கடலூர் புறவழிச் சாலை திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கிடப்பில் போடப்பட்டு உள்ள சரவணன் நகர் இணைப்புச் சாலைத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். 4 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்வதால், மக்களுக்கு பல்வேறு இன்னல்களை தந்து வரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை, விரைந்து முடிக்க வேண்டும். கடலூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க வேண்டும்.       நெடிய போராட்டத்துக்குப் பின், தொடங்கப்பட்ட கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணி, புதிது புதிதாக காரணங்களைச் சொல்லி, தொடராமல் இருப்பதைக் கண்டித்தும் இந்த தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கடலூர் பஸ்நிலையம் அருகே தெருமுனைப் பிரசாரத்தை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எம்.சேகர் தொடங்கி வைத்தார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன், இணை ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

     தெருமுனைப் பிரசாரம், திருப்பாப்புலியூர், கூத்தப்பாக்கம், போடிச் செட்டித் தெரு, முதுநகர், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே பிரசாரத்தை, கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் முடித்து வைத்துப் பேசினார்.
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior