உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், மார்ச் 28, 2012

என்.எல்.சி.க்கு தேசிய சுற்றுச்சூழல் விருது

நெய்வேலி:


      நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் சிறந்த சுற்றுச்சூழலைப் பராமரித்து மின்னுற்பத்தி செய்தமைக்காக மத்திய மின்சக்தி அமைச்சகம் தேசிய சுற்றுச்சூழல் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
   நெய்வேலியில் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் மணிக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த அனல் மின் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதற்காக ஆயிரக்கணக்கில் மரங்களும், மலர்ச்செடிகளும் வளர்க்கப்பட்டு இயற்கை சூழலாக காட்சியளிக்கிறுது.


     மேலும் இந்த அனல்மின் நிலைய மின்னுற்பத்திக்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி எரிக்கப்பட்ட பின்னர், அதன் சாம்பலை மின்னணுக் கருவிகள் மூலம் சேகரித்து வெளியேற்றும் வசதி இந்த மின் நிலையத்தில் உள்ளது. இந்நிலையில் மத்திய மின்சக்தி ஆணைக் குழுவின் உயர் அதிகாரிகள் கடந்த மாதம் நெய்வேலி வந்து இந்த அனல்மின் நிலையத்தை மதிப்பீடு செய்தனர். தேசிய அளவில் சிறந்த சுற்றுச்சூழலைப் பராமரிக்கும் நிறுவனத்துக்கான வெள்ளிக் கேடய விருதுக்கு என்.எல்.சி. அனல்மின் நிலையத்தைப் பரிந்துரைத்தனர். இதைத் தொடர்ந்து இதற்கான விருது வழங்கும் விழா புதுதில்லியில் மார்ச் 22-ம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய மின்சக்தித் துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கலந்து கொண்டு சிறந்த சுற்றுச்சூழல் பராமரிப்புக்கான தேசிய விருதின் வெள்ளிக் கேடயத்தை என்.எல்.சி. ஏ.ஆர்.அன்சாரியிடம் வழங்கினார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior