உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 27, 2012

கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில்பட்டமளிப்பு விழா


கடலூர்: 

     ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரை, மாணவர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா, பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்று ஊரகத் தொழில்கள் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.


கடலூர் புனித வளனார் கல்லூரி 18-வது பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கி, அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது:
 

   கிராமப்புற ஏழை எளிய மாணவ மாணவியருக்கும், இக்கல்லூரியில் ஆங்கிலக் கல்வி மற்றும் கணினிக் கல்வி சிறப்பாகக் கற்றுக் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் முன்னேற்றம் இளைஞர்களின் கைகளில் இருக்கிறது. கல்லூரிகள் பாடங்களைக் கற்கும் இடங்களாக மட்டுமன்றி, ஒழுக்கத்தையும் கற்றும்கொள்ளும் இடமாகத் திகழும்போது, பெற்றோர் மகிழ்ச்சி அடைகிறார்கள். மாணவப் பருவத்திலேயே சமூகப் பணி ஆற்றுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழகக் கல்லூரிகளில், விளையாட்டுத் துறையில் சிறந்த மாணவர்களை அதிகமாக இக்கல்லூரி உருவாக்கி இருப்பது பாராட்டத்தக்கது.


         முதலாம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரை மாணவர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்க, பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இலவச மடிக்கணினி வழங்க முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். வரும் ஆண்டில் 9.12 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட இருக்கிறது என்றார் அமைச்சர் சம்பத்.  பட்டமளிப்பு விழாவில் 682 மாணவ, மாணவியருக்கு பட்டங்களும், 25 மாணவ, மாணவியருக்கு பல்கலைக்கழக சிறப்புத் தகுதிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 

      விழாவுக்கு கடலூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முனைவர் அருமைச் செல்வம், தேர்வுத்துறை இயக்குநர் பெரியநாயகசாமி, துறைத் தலைவர்கள் சின்னப்பன், ஜெயந்தி ரவிச்சந்திரன், கிறிஸ்டி பெர்டினாண்ட் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior