உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 24, 2012

தானே புயல் - ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு


கடலூர் : 


கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த கடலூர் மாவட்டம், அதிகாரிகளின் தீவிர முயற்சியால், பிளஸ் 2 தேர்வில், ஆண்டுதோறும் முன்னேறி வந்த நிலையில், கடந்தாண்டு வீசிய, தானே புயல் பாதிப்பால், பின்தங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது

.24வது இடம்தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய கடலூர் மாவட்டம், கல்வியிலும் மிகவும் பின்தங்கி இருந்தது. கடந்த 2008 - 09ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில், 74.66 சதவீதம் தேர்ச்சியுடன், மாநில அளவில் 30வது இடத்தில் இம்மாவட்டம் இருந்தது.கல்வித் துறை அதிகாரிகள் முயற்சியில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதால், கடந்த 2009 -10 ஆண்டில், தேர்ச்சி சதவீதம் 78 ஆக உயர்ந்தோடு, மாநில அளவில் 26வது இடத்திற்கு முன்னேறியது. 2010 - 11ல், இது, 81.64 சதவீதமாக அதிகரித்து, மாநில அளவில், 24வது இடத்தை அடைந்தது.
தேர்ச்சி குறைவு

இதைத் தொடர்ந்து,2011 - 12 கல்வி ஆண்டிலும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக, கற்றலில் சற்று பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து, சிறப்பு வகுப்புகள் நடத்தினர்.இந்நிலையில், தற்போதுவெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய, 26,709பேரில், 81.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட 0.39 சதவீதம் குறைந்து, மாநில அளவில், 25ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பின்தங்கவில்லை

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:


மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, பள்ளி துவங்கியதும், சிறப்பு கவனம் செலுத்தப் பட்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வீசிய, தானே புயல் காரணமாக,ஒட்டு மொத்த மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்ததால், மாணவர்களால்வர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.இதுதவிர, இந்தாண்டு மாநில அள விலேயே, மொத்த தேர்ச்சி, 0.8 சதவீதம் மட்டும் உயர்ந்துள்ளது. இதனால், 14 மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதை ஒப்பிட்டு பார்க்கும்போது, கடலூர் மாவட்டம், தேர்ச்சி சதவீதத்தில் தொடர்ந்து முன்னேறித் தான் வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior