உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், மே 10, 2012

தேனீ வளர்ப்பு முறைகள்


 சிதம்பரம்: 
கடந்த சில ஆண்டுகளாக குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று தரும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அதுவும் குறிப்பாக தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறு மற்றும் குறு விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று தரும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. தோட்டக் கலைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் சமவெளிப் பகுதிகளில் கூட தேனீ உற்பத்தியைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக விவசாயிகள் தேனீ வளர்ப்பின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும்.


 தோட்டக்கலைப் பயிர்களும், தேனீ உற்பத்திப் பெருக்கம் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
இவற்றின் மகரந்தச் சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிப்பது தேனீக்கள்தான். ஒரு சராசரி தேன்கூட்டில் 50 ஆயிரம் தேனீக்கள் வரை ஒரு நாளைக்கு 10 லட்சம் செடிகளில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.இவ்வாறு மிக குறைந்த செலவில் இயற்கை முறையில் உற்பத்திப் பெருக்க உதவும் தேனீ வளர்ப்பு வாயிலாக விவசாயிகளுக்கு தேன் விற்பனை மூலமாகவும், தேன்கூட்டின் பிற மதிப்பு கூட்டுப் பொருள்கள் விற்பனை வாயிலாகவும் விவசாயிகள் அதிகளவு லாபம் பெற முடியும்.தோட்டக் கலைப் பயிர்களின் உற்பத்திப் பெருக்கம் (சதவீதத்தில்) குறித்த விவரம்: தக்காளி-160 சதவீதம், முந்திரி-157, கொடை மிளகாய்- 227, கத்தரி- 31, துவரை- 133, கொண்டைக் கடலை- 79.5, சோளம், பீன்ஸ்- 41, மா- 68, வாழை- 63. 
 தோட்டக்கலைப் பயிர்களில் மகரந்தச் சேர்க்கைக்கு பல நன்மை தரும் பூச்சிகள் பெரிதும் துணை செய்கின்றன. குறிப்பாக எறும்பு, பட்டாம்பூச்சிகள், வண்டுகள் என பல வகை பூச்சி வகைகள் பெரிதும் உதவி செய்கின்றன.இத்தகைய நடைமுறை சூழலில் மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்யும் தேனீக்களின் விளைவாக பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களில் உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்ட அளவை வேளாண் ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகால ஆராய்ச்சியின் வாயிலாக கண்டறிந்துள்ளனர்.
 
முதலில் ஏக்கருக்கு ஒன்று அல்லது இரண்டு தேனீப் பெட்டிகள் வைத்து பழகிய பின்பு அவற்றின் பொருளாதார லாபங்களை பெற்ற பின்பு தேவையின் அடிப்படையில் விவசாயிகள் தேனீ கூடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம். தற்போது தமிழக அரசு கதர்த்துறை சார்பில் சட்டப்பேரவையில் தேனீ வளர்ப்பை பிரபலப்படுத்த ஒரு கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து முதல் கட்டமாக 440 விவசாயிகள் 4400 தேனீ குடும்பங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த முயற்சியில் விவசாயிகள் தங்களை இணைத்து கொண்டு தங்களின் தோட்டங்களில் உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்த முடியும்.  குறைந்த செலவில் அதிக லாபம் பெற முடியும் என்கிறார் உதவிப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீன். 
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior